என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பள்ளி"
- வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர்.
- மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையானது தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர். பின்னர் ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல் டம்ளரை மாணவிகள் எல்லோரும் எடுத்து சியர்ஸ் போட்டுவிட்டு குடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீடியோவில் இருக்கும் வகுப்பறை பாளையங்கோட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தான் என்பதும், அந்த மாணவிகள் அதே பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மது குடித்த மாணவிகள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது தெரியவந்தது. மேலும் விடுதியில் தற்போது பராமரிப்பு பணி நடக்கும் நிலையில், பள்ளி வளாகத்தில் காலியாக இருக்கும் வகுப்பறையில் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த வகுப்பறையில் மற்ற மாணவிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தான், 9-ம் வகுப்பு மாணவிகள் குழுவாக அமர்ந்து மது குடித்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம், மாணவிகள் மதுபானம் அருந்திய விவகாரம் தொடர்பாக அந்த மாணவிகளை அழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்தனர். பின்னர் அநாகரீகமாக செயல்பட்ட 6 மாணவிகளை சஸ்பெண்டு செய்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது மட்டுமின்றி, அவர்களுக்கு திருட்டுத்தனமாக மதுபானம் விற்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
- சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் அரசின் மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் உணவுகள் பரிமாறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்ட அந்த உணவுகளை மாணவர்கள் உண்ணும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஷியோபூர் மாவட்ட ஆட்சியர், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் சம்பவம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சத்துணவு பொறுப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பள்ளி முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
- மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும்.
- நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். கார் டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் வான்மதி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார்.
அவர் படித்த காலத்தில் நடந்த பள்ளி விழாவில் அப்போதைய கலெக்டராக இருந்த உதயசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை பார்த்து தானும் கலெக்டராக வேண்டும் என உறுதி கொண்டு வான்மதி படிக்கத் தொடங்கினார். அவரது விடாமுயற்சியால் நன்கு படித்து அவர் நினைத்தது போன்று கலெக்டராக தேர்ச்சி பெற்றார். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில் கலெக்டராக வான்மதி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சொந்த ஊரான சத்தியமங்கலத்திற்கு வான்மதி வந்தார். இதையடுத்து அவர் தான் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார்.
அவருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வான்மதி மாணவிகளிடம் பேசும்போது,
தான் ஒரு கலெக்டரை பார்த்து கலெக்டராக வேண்டும் என லட்சியத்துடன் படித்து கலெக்டர் ஆனதாக கூறினார். மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும். நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள் என மாணவிகளிடம் பேசினார்.
- ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
- கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 6-ம் தேதி ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
அப்போது கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், தற்போது இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- பெற்றோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்சால் பைல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
நேற்று மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற 17 மாணவ, மாணவிகளுக்கு இரவு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மூன்று மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.
இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
- நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வன்னிகோனேந்தலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளான்.
அப்போது அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் சேர்ந்து 9-ம் வகுப்பு மாணவனிடம் மிட்டாயை பிடுங்கிக் கொண்டதோடு, அவனை அவதூறாக பேசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இரு தரப்பினராக மாணவர்கள் பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.
அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் மாணவர்கள் சமாதானமாகவில்லை. உடனடியாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து சுமார் 15 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர். அந்த வகையில் காலாண்டு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமான முறையில் தலைமுடியை வெட்டி விட்டு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டு அவர்களை விடுவித்தனர்.
- மாணவர்கள் கோஷ்டியாக பிரந்து மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
- பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை.
நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அரசு பள்ளியில் 2 நாட்களுக்கு முன்பு மாணவர்கள் கோஷ்டியாக பிரந்து மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
- தற்போது அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
- பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுகாவில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று மதியம் 2.30 மணியளவில் பள்ளியின் கழிப்பறையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த சம்பவம் பள்ளி மற்றும் விடுதி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தாயும், சேயும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, ஷாஹாபூர் அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நிர்மலா, ஷாஹாபூர் போலீஸ் நலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவியிடம் விசாரித்தபோது தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை அதிகாரிகள் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளியின் முதல்வர் பாசம்மா, விடுதி வார்டன், அறிவியல் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை கர்நாடக மாநில கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் காந்தராஜு, இடைநீக்கம் செய்தார்.
இது குறித்து போலீஸ் துணை ஆணையர் ஹர்ஷல் போயர் கூறுகையில், பள்ளி நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க தவறிவிட்டது. இந்த வழக்கு குழந்தை திருமணம் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சஷிதர் கோசம்பே கூறுகையில், பள்ளி ஊழியர்கள் மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
- அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
- தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
வேலியே பயிரை மேய்ந்தது போல அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக் கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?
ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில், தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
- விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
- அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் செட்டிகுளம் அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி பங்கேற்று பூஜையை தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் அழகுமீனா, மாவட்ட கல்வி துறை அதிகாரி பாலதண்டாயுதபாணி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜ், வட்டார தலைவர் அசோக்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், வார்டு தலைவர் வர்கீஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் மற்றும் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், தக்கலையில் வசந்த் அன்கோவின் 130-வது கிளை இன்று திறக்கப்பட்டது. வசந்த் அன்கோ பார்ட்னர் விஜய்வசந்த் எம்.பி. புதிய கிளையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
- கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி பூனாயிருப்பு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் சாப்பிட்டனர். அப்போது சில மாணவர்கள் சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர்.
இதையடுத்து காலை உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.
- நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம்.
நேற்று நடந்த மாணவரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.
நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.
மேலும், அவ்வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து நம்பிக்கையளிக்கும் விதமாக உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.






