என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
- தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மக்களவை தேர்தலில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-
இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள். பெண்கள் அட்டூழியங்களை (கொடுமைகள்) எதிர்கொண்டு வருகிறார்கள். தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஆகியவற்றின் நோக்கத்தால் இந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் வெறுப்புணர்வை வளர்த்துள்ளனர். அனைத்து வகையிலான வளர்ச்சிக்கும், உரிமைகள் பறிக்கப்பட்டவர்களின் நீதிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் மற்றும் நான் எப்போதுமே போராடி வருகிறோம்.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அர்ப்பணித்துள்ளது. அனைவருடைய சிறந்த எதிர்காலத்திற்காகவும், ஒன்றிணைந்து வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை கட்டமைக்க காங்கிரஸ்க்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு சோனியா காந்தி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
- பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது.
- அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம்.
பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் தார் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
அம்பேத்கரை காங்கிரஸ் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கின்றனர் என்பதுதான் உண்மை. பா.ஜனதா 400 இடங்களை பெற்றால், பிரதமர் மோடி அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் வதந்தியை பரப்பு வருகிறது.
பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது. நாங்கள் அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது.
காங்கிரஸ் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரக்கூடாது என்பதில் மோடி 400 இடங்களை விரும்புகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாப்ரி லாக் போட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி 400 இடங்களை விரும்புகிறார்.
ஓபிசி இடஒதுக்கீட்டை அவர்களது வாக்கு வங்கிக்கு அளிப்பதை தடுத்த மோடி 400 இடங்களை விரும்புகிறார். எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டுகளாக நீட்டிக்க 400-க்கும் அதிகமான இடங்களை பயன்படுத்தியுள்ளோம். பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் செய்ய, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பயன்படுத்தியுள்ளோம்.
மோடி 400 இடங்களை கேட்பது நாட்டின் காலி இடங்களை, தீவுகளை மற்ற நாடுகளுக்கு காங்கிரஸ் அளித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓபிசி-யின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு அவர்களுடைய வாக்கு வங்கிக்குக்கு அளிக்க முடியாது. வாக்கு வங்கியின் அனைத்து ஜாதிகளும் ஓபிசி என ஒரே இரவில் அறிவிக்க முடியாது.
அரசியலமைப்பை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு பங்கு மிகக்குறைவு என்றும், அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தார் என்றும் காங்கிரஸ் கூறத் தொடங்கியது. அம்பேத்கரையும் அரசியல் சாசனத்தையும் முதுகில் குத்தியது காங்கிரஸ்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி பழங்குடியினரின் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை 14 முதல் 15 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.
- மோடி கடந்த 10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களையும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி பழங்குடியினரின் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை 14 முதல் 15 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறார். மோடி கடந்த 10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார்.
வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம். டிப்ளமோ மற்றும் பட்டதாரி வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
- குஜராத்தில் 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார்.
பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை 3-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. சூரத் தொகுதியில் முகுஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் நடத்தப்படாது. மற்ற 25 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய இருக்கிறார்.
இந்த பள்ளியில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று அகமதாபாத்தில் வாக்கிற்காக ஓட்டம் என்ற பெயரில் மாரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதற்கான வழிப்புணர்வு ஓட்டமாக இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.
2014 மற்றும் 2019-ல் பா.ஜனதா 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தற்போது முழுமையாக கைப்பற்றும் நம்பிக்கையில் உள்ளது.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
- மம்தா பானர்ஜியின் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டள்ளது.
- ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. வீட்டில் இருந்து 350 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மேற்கு வங்காள மாநிலம் புர்பா பர்தமான் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
மம்தா பானர்ஜி (Didi) பா.ஜனதாவை தோற்கடிக்க துர்காபூரில் 15 நாட்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 5 வருடங்கள் அவர் அங்கே தங்கியிருந்தாலும் துர்காபூரில் வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜிக்கு சவால் விடுகிறேன். தொழில்துறை நகரமான துர்காபூரில் குற்றவாளிகளுக்காக புதிய தொழிற்சாலை தொடங்கி வைத்துள்ளார். இந்தியா கூட்டணி 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.
மம்தா பானர்ஜியின் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. வீட்டில் இருந்து 350 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஜார்க்கண்டில் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி முதல்வர் மற்றும் பிரதமர் என 23 வருடங்கள் இருந்துள்ளார். அவர் மீது சிங்கிள் குற்றச்சாட்டு கிடையாது. அவர் மீது 25 பைசா அளவிற்குக் கூட குற்றச்சாட்டு கிடையாது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது மருமகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வரவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வாக்கு வங்கி குறித்து பயப்பட்டார்கள். ஊடுருவியவர்கள் அவர்களுடைய வாக்கு வங்கி. அவர்களை பார்த்து மம்தா பானர்ஜி பயப்பட்டார்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலம் ஜூன் 4-ந்தேதியுடன் காலாவதியாகிவிடும்- பிரதமர் மோடி
- நவீன் பட்நாயக் ஜூன் 9-ந்தேதி 6-வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பதவி ஏற்பார்- வி.கே. பாண்டியன்
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்து வருகிறார். ஒடிசாவில் பா.ஜனதாவும், பிஜு ஜனதா தளம் கட்சியும் இணைந்து போட்டியிடுவதாக இருந்தது. தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நிலவியதால் தனித்து போட்யிடுகின்றன.
ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி இரண்டு முறை ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பெர்ஹாம்பூர் மற்றும் நபரங்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும்போது, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலம் ஜூன் 4-ந்தேதியுடன் காலாவதியாகிவிடும்" என்றார்.
ஜூன் 4-ந்தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்றைய தினம்தான் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதை வைத்துதான் பிரதமர் மோடி அவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக நவீன் பட்நாயக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் "பா.ஜனதா நீண்ட நாட்களாக பகல் கனவு காண்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியனிடம், இந்த முறை ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் எனக் கூறுகிறதே? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வி.கே. பாண்டியன் கூறுகையில் "நவீன் பட்நாயக் ஜூன் 9-ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள் 6-வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பதவி ஏற்பார்" என்றார்.
- ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடிக்கு ஆதரவு.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. அந்த வகையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் மே 13 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதே நாளில் அம்மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது.
ஆந்திராவில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பரப்புரைக்காக ஆந்திர பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சுற்று பயணத்தின் அங்கமாக அம்மாநிலத்தின் தர்மவரம் பகுதியில் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதுவே ஒட்டுமொத்த ஆந்திர பிரதேச மாநிலமும் பிரதமர் மோடி மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக இருப்பதை எடுத்துரைக்கிறது."
"இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெறப்போகிறது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாது..," என்று தெரிவித்தார்.
- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியே வந்து வாக்களிக்க சிரமமாக இருக்கும்.
- 37 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. 14 இடங்களுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 2-வது கட்டமாக வருகிற 7-ந்தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தற்போது நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. மக்கள் வெளியேற வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு வெயில் முக்கிய காரணம்.
வழக்கமாக காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளரக்ள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வெயில் காரணமாக வாக்குப்பதிவு நேரத்தை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும் என கர்நாடகா மாநில பா.ஜனதா தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.
கார்நாடகா மாநில பா.ஜனதா அந்த மனுவில் "காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாக்களிக்க மக்கள் வெளியே வருவது மிகவும் கடினமானதாக இருக்கும். 14 தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு கர்நாடகாவில் வெப்பநிலை 37 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வருகிறது. அபாய நிலையை வெப்பநிலை எட்டியுள்ளது. இது தேர்தல் நாளில் மக்கள் வாக்களிக்க கஷ்டமானதாக இருக்கும். வாக்குப்பதிவை சிறப்பாக நடத்த, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
+2
- ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி- மரியம் ஆலம்.
- மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பர்தாமன்-துர்காபூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் இங்கே அனுபவிப்பதற்கான வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கான என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தில் இந்துக்களை திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாம் தர குடிமக்களாக்கியுள்ளது. காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்றி தலித் மற்றும் ஓபிசி இடஒதுக்கீடுகளை பறித்து ஜிஹாதி வாக்கு வங்கிக்கு வழங்க விரும்புகிறது.
மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக அளிக்க முடியுமா? என காங்கிரஸ்க்கு சவால் விட்டிருந்தேன். ஆனால், அவர்கள் அமைதியாக உள்ளனர். காங்கிரசின் இளவரசர் பயந்து ரேபரேலியில் போட்டியிடுகிறார். மேற்கு வங்காள அரசுக்கு மனிதாபிமானத்தை விட சமரச அரசியல்தான் மிகவும் முக்கியமானது. இதனால் சந்தேஷ்காளி குற்றவாளி ஷேக் ஷாஜகானை பாதுகாத்து வருகிறது. மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி 2024 தேர்தலில் இதுவரை எந்த காலத்திலும் மிகவும் குறைவான எண்ணிக்கை என்ற வகையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும்.
காங்கிரஸ் தலைவர் மக்களவை உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு மாநிலங்களை மூலும் பாராளுமன்றத்திற்கு நுழைந்துள்ளார். இதன்மூலம் அக்கட்சியின் உடனடித் தோல்வியை முன்னதாகவே கண்டேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமரச அரசியலுக்காக சிஏஏ-வை எதிர்க்கிறது. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் சமரச அரசியலை மட்டுமே நம்புகின்றனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
முன்னதாக உத்தர பிரதேச மாநிலம் பருக்காபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாவல் கிஷோர் ஷக்யாவை ஆதரித்து சமாஜ்வாடி கட்சி தலைவரும், சல்மான் குர்ஷித்தின் உறவினருமான (Niece- சகோதரர் மகள், அல்லது சகோதரி மகள்) மரியா ஆலம் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது மரியா ஆலம் கூறியதாவது:-
புத்திசாலிதனத்தோடு, உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக ஒன்றிணைந்து ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி. அரசியலமைப்பு, ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன். மனிதாபிமானம் (மனிதநேயம்) அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

நாடு, அதன் அழகு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க விரும்பினால், எந்தவிதமான உந்துதலையும் பெறாமல் புத்திசாலித்தனமாக வாக்களிக்களியுங்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும் முஸ்லிம்களை புறக்கணியுங்கள்.
இவ்வாறு மரியம் ஆலம் பேசியிருந்தார்.
இந்த வீடியோ வைரலாக பரவி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீதும், அவர் பேசியபோது அங்கிருந்து சல்மான் குர்ஷித் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது.
இது தொடர்பாக முன்னதாக பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்தியா கூட்டணி முஸ்லிம்கள் ஜிஹாத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. இது மிகவும் கல்வியறிவு பெற்ற குடும்பத்தில் இருந்து வந்துள்ளது. மதராஸில் இருந்து வந்த சிறுவனிடம் இருந்து வரவில்லை. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கூறிக் கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா கூட்டணி அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை இழிவுப்படுத்தியுள்ளது.
ஒருபுறம் SC, ST, OBC மற்றும் பொது பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய கூட்டணி மறுபுறம் வாக்கு ஜிகாத் என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறது. அவர்களின் எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில்தான் ஜிஹாத் வாக்கு வங்கி எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடிக்கு தற்போது மிகவும் பிடித்த வார்த்தைகள்... பாகிஸ்தான், சுடுகாடு, இந்து- முஸ்லிம், கோயில்- மசூதி, தாலி, பசு, எருமை.
- 2-வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல். போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும்.
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அவர்களுடைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காமல் வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
குறிப்பாக எஸ்.டி., எஸ்.சி., ஓபிசி-க்களின் இடஒதுக்கீடு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். மேலும், நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பேச்சு குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-
இந்தியில் கிட்டதட்ட 1.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. டெக்னிக்கல் மற்றும் படிப்பு தொடர்பான அனைத்து பிரிவுகள் உள்பட ஏறத்தாழ 6.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. ஆனால் பிரதமர் மோடிக்கு தற்போது மிகவும் பிடித்த வார்த்தைகள்... பாகிஸ்தான், சுடுகாடு, இந்து- முஸ்லிம், கோவில்- மசூதி, தாலி, பசு, எருமை.
2-வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல். இன்னும் ஏழு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும். வேலைவாய்ப்பு, ஏழைகள், விவசாயிகள், விலைவாசி, வளர்ச்சி, இளைஞர்கள், அறிவியல், முதலீடு போன்ற வார்த்தைகளை அவர் மறந்துவிட்டார்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
- நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது,
- அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, ராகுல் காந்தி அங்கே சென்றார்.
குஜராத் மாநிலம் தஹோத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கடவுள் ராமர் கற்பனையே. வரலாற்று ரீதியாக அல்லது அறிவியல்பூர்வமாக அவர் இருந்ததற்கான எந்த சான்றுகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.
அவர்கள் தடைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தினார். 10 நாட்கள் சடங்குகளுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22-ந்தேதி நடைபெற்றது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, அடுத்த நாளே அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி அங்கே சென்றார்.
அப்சல் குருவுக்கு ஆதரவான துண்டாக்க விரும்பும் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடைய கட்சி அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு (கணையா குமார் வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்) மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் தேச விரோத சக்திகளுடன் இல்லையா? அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?
அம்பேத்கர் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது, சமூக நீதிக்காக இடஒதுக்கீடு எனக் கூறியதை பிரதமர் மோடி மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது நமது அரசியலமைப்ப சூறையாடுவதற்கு சமம். நாட்டை பலவீனப்படுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
- ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
- அமேதி தொகுதியில் கே.எல். சர்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகள் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட்டு வருகிறார்கள். சோனியா காந்தி மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என முடிவு செய்ததால் ரேபரேலிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற கேள்வி எழுந்தது.
அதேநேரத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாகவும், அமேதி தொகுதியில் கே.எல். சர்மாவும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் காந்தி குடும்பம் அமேதி தொகுதியில் போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் ஏற்கனவே தோல்வியை ஏற்றுக் கொண்டுவிட்டது என அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்மிரிதி இரானி கூறுகையில் "அமேதி தொகுதியில் காந்தி குடும்பம் போட்டியிடாதது, இந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை குறிக்கிறது.
இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்திருந்தால், அவர்கள் போட்டியிட்டிருப்பார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை நிறுத்தியிருக்க மாட்டார்கள்.
இவ்வாறு ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.






