search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    23 வருடம் முதல்வர், பிரதமராக இருந்துள்ளார்: மோடி மீது சிங்கிள் குற்றச்சாட்டு கூட கிடையாது- அமித் ஷா
    X

    23 வருடம் முதல்வர், பிரதமராக இருந்துள்ளார்: மோடி மீது சிங்கிள் குற்றச்சாட்டு கூட கிடையாது- அமித் ஷா

    • மம்தா பானர்ஜியின் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டள்ளது.
    • ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. வீட்டில் இருந்து 350 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மேற்கு வங்காள மாநிலம் புர்பா பர்தமான் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி (Didi) பா.ஜனதாவை தோற்கடிக்க துர்காபூரில் 15 நாட்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 5 வருடங்கள் அவர் அங்கே தங்கியிருந்தாலும் துர்காபூரில் வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜிக்கு சவால் விடுகிறேன். தொழில்துறை நகரமான துர்காபூரில் குற்றவாளிகளுக்காக புதிய தொழிற்சாலை தொடங்கி வைத்துள்ளார். இந்தியா கூட்டணி 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.

    மம்தா பானர்ஜியின் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. வீட்டில் இருந்து 350 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

    நேற்றிரவு ஜார்க்கண்டில் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி முதல்வர் மற்றும் பிரதமர் என 23 வருடங்கள் இருந்துள்ளார். அவர் மீது சிங்கிள் குற்றச்சாட்டு கிடையாது. அவர் மீது 25 பைசா அளவிற்குக் கூட குற்றச்சாட்டு கிடையாது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது மருமகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வரவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வாக்கு வங்கி குறித்து பயப்பட்டார்கள். ஊடுருவியவர்கள் அவர்களுடைய வாக்கு வங்கி. அவர்களை பார்த்து மம்தா பானர்ஜி பயப்பட்டார்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×