என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின
- 177 ரன்களை துரத்திய லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின.
அதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 57 ரன்களை குவித்தார். கடைசியில் களமிறங்கிய எம்.எஸ். டோனி 9 பந்துகளில் 28 ரன்களை குவித்தார்.
177 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோ அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.எஸ்.கே. சார்பில் முஸ்தாஃபிசுர் மற்றும் பத்திரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து லக்னோவுக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ்க்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
- ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்
- "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்
மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துக்களை தேரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்தும் கொள்கிறேன்.
ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். "மக்கள் தீர்ப்பே மகேசன் நீர்ப்பு" என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.
- முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது.
மும்பை:
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி அளவில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் கிடைத்த தகவல்களின்படி, முதல் கட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது. காங்கிரஸ் ஏற்கனவே தனது தோல்வியை ஒப்பு கொண்டு விட்டது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.
தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி சரிந்து விழும். அந்த கூட்டணியே இருக்காது. அக்கூட்டணி கட்சிகள் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்கிறார்கள். ராகுல் காந்திக்கும், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. 25 சதவீத தொகுதிகளில் இந்திய கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகிறார்கள்.
எதிர்க்கட்சி கூட்டணி என்பது தங்கள் ஊழல் செயல்களை பாதுகாக்க ஒன்றிணைந்த சுயநலவாதிகள் குழு.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் சிலர் மேல்-சபை தேர்தல் மூலம் பாராளுமன்றத்தில் நுழைய பார்க்கிறார்கள்.

தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் பயந்து ஓடுகிறார்கள். சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாததால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து வெளியேறி மேல்சபை தேர்தலுக்கு சென்றனர்.
இந்தியா கூட்டணியின் தலைவர் யார்? என்பதை அவர்களால் மக்களுக்கு சொல்ல முடியாது. காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) அமேதி தொகுதியில் இருந்து ஓடினார். தற்போது வயநாடு தொகுதியில் இருந்தும் ஓடிவிடுவார்.
வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்திக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அவரும், அவரது குழுவினரும் 26-ந்தேதி வயநாட்டு தொகுதியில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக காத்திருக்கிறார்கள். அமேதியில் இருந்து தப்பி ஓடியது போல அவர்கள் வயநாட்டை விட்டு ஓடுவார்கள்.
அமேதியில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி வயநாட்டையும் இழக்க நேரிடும். எனவே அவர் ஏப்ரல் 26-ந்தேதிக்கு பிறகு பாதுகாப்பான இடத்தை தேட வேண்டும்.
காங்கிரஸ் செய்த தவறுகளை சரி செய்வதற்காகவே எங்களின் அதிக நேரம் செலவழிக்கப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகள் உலகில் இந்தியாவின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஆண்டாக இருக்கும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
குடியுரிமை திருத்த சட்டம் இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கியர்களின் கதி என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க..
- இரவு, பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் தனி முகவர்கள்; கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள்!
அ.தி.மு.க. 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே பாராளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.
இந்த இயக்கத்தின் பாராளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, அம்மாவின் காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் 3-வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு பாராளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு; அம்மாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க..
ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், 3-வது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அ.தி.மு.க., அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, நேற்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளுக்கும், கோடானு கோடி கழக உடன்பிறப்புகளுக்கும், முகவர்களுக்கும், அதேபோல், கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும்; கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும்; கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதியவர் ஒருவரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உதவி செய்வது போல் அழைத்து வந்துள்ளார்.
- முதியவரிடம் எதுவும் கேட்காமலேயே வாக்கை பதிவு செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு நேற்று நடந்தது.
வாக்குப்பதிவிற்காக வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட வி.மணவெளி தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு முதியவர் ஒருவரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உதவி செய்வது போல் அழைத்து வந்துள்ளார்.
அங்குள்ள வாக்குச்சாவடி பணியாளர்களிடம் முதியவருக்கு பார்வை தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து முதியவரின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது, பின் முதியவரிடம் கையெழுத்தை பெற்ற பணியாளர்கள் உதவிக்கு வந்த நபருடன் வாக்களிக்க முதியவரை திரை மறைவிற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த முதியவருடன் சென்றவர் முதியவரிடம் எதுவும் கேட்காமலேயே வாக்கை பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த முதியவரை அழைத்து சென்று வெளியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
தன்னை கேட்காமலே அரசியல் பிரமுகர் தனது விருப்பத்திற்கு வாக்கு பதிவு செய்ததை அந்த முதியவர் வீடியோவில் புலம்பியுள்ளார். இந்த புலம்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
- கேமராக்கள் மூலமாக போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை:
தென்சென்னை தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராணிமேரி கல்லூரியில் 172 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் 180 கேமராக்களும், லயோலா கல்லூரியில் 188 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலமாக போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
- பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26, மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. பெங்களூரு உள்பட அதனை சுற்றியுள்ள 14 தொகுதிகளில் இந்த முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் களத்தில் 247 பேர் உள்ளனர். இந்த தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி 3 முறை கர்நாடகம் வந்து பிரசார பொதுக்கூட்டம், வாகன பேரணியில் பங்கேற்று உள்ளார். கலபுரகி, சிவமொக்கா, மைசூரு, மங்களூரு ஆகிய நகரங்களில் அவர் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி 4-வது முறையாக அவர் மீண்டும் இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.
சிறப்பு விமானம் மூலம் கர்நாடகம் வரும் பிரதமர், சிக்பள்ளாப்பூரில் நடைபெறும் பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதை முடித்துக் கொண்டு அவர் மாலை 6 மணியளவில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இதில் பெங்களூருவில் உள்ள 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூரு மற்றும் சிக்பள்ளாப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 23, 24-ந்தேதி ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்.
24-ந்தேதி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சிக்கமகளூரு, உடுப்பி உள்ளிட்ட நகரங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
- கள்ளக்குறிச்சியில் 75.64 சதவீதம், தருமபுரியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
- பொள்ளாச்சியில் 72.22 சதவீதம், நாகப்பட்டினத்தில் 72.21 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
சென்னை:
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.
காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஆரணி- 73.77
கரூர் - 74.05
பெரம்பலூர்- 74.46
சேலம்- 74.55
சிதம்பரம்- 74.87
விழுப்புரம்- 73.49
ஈரோடு- 71.42
அரக்கோணம்- 73.92
திருவண்ணாமலை- 73.35
விருதுநகர்- 72.99
திண்டுக்கல்- 71.37
கிருஷ்ணகிரி- 72.96
வேலூர்- 73.04
பொள்ளாச்சி- 72.22
நாகப்பட்டினம்- 72.21
தேனி- 71.74
நீலகிரி- 71.07
கடலூர்- 72.40
தஞ்சாவூர்- 69.82
மயிலாடுதுறை- 71.45
சிவகங்கை- 71.05
தென்காசி- 71.06
ராமநாதபுரம்- 71.05
கன்னியாகுமரி- 70.15
திருப்பூர்- 72.02
திருச்சி- 71.20
தூத்துக்குடி- 70.93
கோவை- 71.17
காஞ்சிபுரம்- 72.99
திருவள்ளூர்- 71.87
திருநெல்வேலி- 70.46
மதுரை- 68.98
ஸ்ரீபெரும்புதூர்- 69.79
சென்னை வடக்கு- 69.26
சென்னை தெற்கு- 67.82
சென்னை மத்தி- 67.35
- தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவு.
- அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் அ.தி.மு.க.வினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கள்ள ஓட்டு போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை சீல் வைக்கப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது.
- இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது. அந்த இடங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது பா.ஜனதா பொய்களை அள்ளி வீசியது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சியை போன்று அதிக அளவில் பொய் சொல்ல வேறு கட்சிகள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.
மேற்கு திசையில் இருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இந்த முறை பா.ஜனதாவை முற்றிலும் அகற்றிவிடுவது போல் உணர்த்துகிறது. இது பா.ஜனதாவின் முதல் நாளின் முதல் ஷோ பிளாப் போன்று உள்ளது.
பா.ஜனதா திரும்ப திரும்ப சொல்லுவதை பொதுமக்கள் யாரும் கேட்க விரும்பவில்லை. தற்போது வரை அவர்கள் புனைந்துள்ள கதை, யாரும் கேட்க விரும்பாத வகையில் உள்ளது.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
- மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
சென்னை:
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்டனர்.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவி இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அவை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
- நாமக்கல்லில் 67.37 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 67.23 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
- சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.
காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நீன்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது.
அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர். மதியம் 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 67.23 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
4. ஆரணி- 67.34
5. கரூர் - 66.91
6. பெரம்பலூர்- 66.56
7. சேலம்- 65.86
8. சிதம்பரம்- 66.64
9. விழுப்புரம்- 64.83
10. ஈரோடு- 64.50
11. அரக்கோணம்- 65.61
12. திருவண்ணாமலை- 65.91
13. விருதுநகர்- 63.85
14. திண்டுக்கல்- 64.34
15. கிருஷ்ணகிரி- 64.65
16. வேலூர்- 65.12
17. பொள்ளாச்சி- 63.53
18. நாகப்பட்டினம்- 64.21
19. தேனி- 63.41
20. நீலகிரி- 63.88
21. கடலூர்- 64.10
22. தஞ்சாவூர்- 63.00
23. மயிலாடுதுறை- 63.77
24. சிவகங்கை- 62.50
25. தென்காசி- 63.10
26. ராமநாதபுரம்- 63.02
27. கன்னியாகுமரி- 62.82
28. திருப்பூர்- 61.43
29. திருச்சி- 62.30
30. தூத்துக்குடி- 63.03
31. கோவை- 61.45
32. காஞ்சிபுரம்- 61.74
33. திருவள்ளூர்- 61.59
34. திருநெல்வேலி- 61.29
35. மதுரை- 60.00
36. ஸ்ரீபெரும்புதூர்- 59.82
37. சென்னை வடக்கு- 59.16
38. சென்னை தெற்கு- 57.30
39. சென்னை மத்தி- 57.25






