search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா 7-ந்தேதி வரை நடக்கிறது
    X

    திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா 7-ந்தேதி வரை நடக்கிறது

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா இன்று தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா இன்று தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. அஸ்வினியுடன் இன்று ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது. நாளை (4-ந்தேதி) ஆடி பரணியும், 5-ந்தேதி ஆடி கிருத்திகை விழாவும் நடைபெறுகிறது.

    முக்கிய விழாவான தெப்பத் திருவிழா 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் மாலையில் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    ஆடிக்கிருத்திகை விழாவை யொட்டி இன்று காலை முதலே திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் காவடி, அலகு குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அதிகாலை 4 மணியள வில் மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடத்தப் பட்டது. பின்னர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வாணையுடன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவதற்கு சிறப்பு வசதிகளும், முருக பெருமானை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசன வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    தலைமுடி காணிக்கை, நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவண பொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்லேறு பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    குற்றங்களை தடுக்க கோவிலின் முக்கிய இடங் களில் சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நகராட்சி சார்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர், தடையில்லா குடிநீர் வழங்க குளோரின் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளும், 30 நடமாடும் நவீன கழிவறைகளும், அமைக்கப்பட்டு இருக்கிறது.

    பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் உட்பட 368 பேருந்துகள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வந்தவாசி, செய்யாறு, திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வேலூர், ஆற்காடு, சித்தூர், திருப்பதி ஆகிய இடங்களிலிருந்து திருத்தணிக்கு இயக்கப்படுகின்றது.

    இந்த சிறப்பு பஸ்கள் இன்று முதல் 6-ந்தேதி வரையில் 4 நாட்களிலும் இரவும், பகலும் இயக்கப்பட உள்ளது.

    திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மேற்பார்வையில் தக்கார் ஜெய்ஷ்ங்கர், இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சிவாஜி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×