என் மலர்tooltip icon

    உலகம்

    • 8 மாதங்களில் 8 போரை நிறுத்தும்போது, போர்களை விரும்பவில்லை என்பதுதான் உண்மையான அர்த்தம்.
    • நான் மிகவும் கொடூரமாக சென்று கொண்டிருக்கிறேன் என எல்லோரும் நினைத்தனர்.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.

    அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பாராளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உரையாற்றினார்.

    அப்போது டிரம்ப் பேசியதாவது:-

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையிலான ஒப்பந்தம் மூலம் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது போர் முடிவு மட்டுமல்ல. இது புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல். அமெரிக்காவை போன்று, இஸ்ரேலுக்கு பொற்காலம் ஏற்படும்.

    பல வருட இடைவிடாத போர் மற்றும் முடிவில்லா ஆபத்துக்குப் பிறகு, இன்று வானம் அமைதியாக இருக்கிறது, துப்பாக்கிகள் அமைதியாக இருக்கின்றன, சைரன்கள் அமைதியாக இருக்கின்றன. இறுதியாக அமைதியான ஒரு புனித பூமியில் சூரியன் உதிக்கிறது.

    அமைதி ஒப்பந்தம் மூலமாக நம்முடைய நேரத்தை நாம் வீணடிப்பதாக ஏராளமானோர் தெரிவித்தனர். ஆனால், நாம் இந்த சாதனையை எட்டியதற்காக பல சிறந்த அமெரிக்க தேசப்பற்றாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    8 மாதங்களில் 8 போரை நிறுத்தும்போது, போர்களை விரும்பவில்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். நான் மிகவும் கொடூரமாக சென்று கொண்டிருக்கிறேன் என எல்லோரும் நினைத்தனர்.

    நான் எல்லோருடன் போருக்கு சென்று கொண்டிருப்பதாகவும், நான் போருக்கு செல்லும் ஆளுமை கொண்டவராகவும் இருப்பதாக ஹிலாரி கிளிண்டன் கூறியதை நினைவூட்டுகிறேன் ஆனால், என்னுடைய ஆளுமை போரை நிறுத்தவது பற்றியது என நினைக்கிறேன்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    • இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டார் டிரம்ப்.
    • காசா அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு சென்றார்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் 20 பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. அதற்கு இணையான இஸ்ரேல், சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையிலான அமைதி அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு நடக்கிறது எகிப்தில் நடைபெறுகிறது. இதில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்கிறார்.

    இதற்கான அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அவர், இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். இஸ்ரேல் நாட்டில் அவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இஸ்ரேல் சென்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக சென்றார். அப்போது இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் எழுந்து நின்று, உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை" என உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு.
    • தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வு.

    2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோய்கிர் (நெதர்லாந்து வம்சாவளி அமெரிக்க- இஸ்ரேல் பொருளாதார வரலாற்றாசிரியர்), பிலிப் அகியோன் (பிரான்ஸ் பொருளாதார நிபுணர்), பீட்டர் ஹோவிட் (கனடா பொருளாதார நிபுணர்) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான முன் தேவைகள் என்ன என்பது தொடர்பாக ஆய்வுவாக்கவும், காலாவதியான செயல்முறைகளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும் கூட்டாக நோபல் பரிவு அறிவிக்கப்படுள்ளது.

    மருத்துவத்திற்கான நோபல் பரிசு

    அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயற்பியலுக்கான நோபல் பரிசு

    அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இலக்கியத்திற்கான நோபல் பரிசு

    71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை'-க்கு ( László Krasznahorkai)அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமைதிக்கான நோபல் பரிசு

    அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். 

    • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 20 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
    • பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா (ஹமாஸ்) இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்து உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து முதல் கட்டமாக இரு தரப்பினருக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கி இருக்கிறது. காசாவில் ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்து சுமார் 1,900 பாலஸ்தீனர்கள் கைதிகளை இஸ்ரேல் ரிலீஸ் செய்ய வேண்டும் இதுதான் போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நிலை.

    போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து இன்று காலை முதற்கட்டமாக இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 7 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர். எய்டன் மோர், கலி, கிவ்பெர்மன் உள்ளிட்ட பிணைக்கைதிகளும் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இதை கேட்டு அவர்களது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இஸ்ரேல் தலைநகர் டெல்–அவிவ் உள்ளிட்ட நகரங்களில் பெரிய திரையில் பிணைக்கைதிகள் ரிலீஸ் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அவர்கள் கையில் கொடியுடன் உற்சாகத்தை வெளிபடுத்தினார்கள். இஸ்ரேல் ராணுவம் அவர்களுக்கு உடற்தகுதி சோதனை மேற்கொண்டபின்னர், தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று குடும்பத்துடன் இணைய இருக்கிறார்கள்.

    இதற்கிடையே 2ஆவது கட்டகமாக 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். இதனால் உயிரிடன் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். இவர்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர்.

    பிணைக்கைதிகளுக்கு ஈடாக பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது. போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கி இருப்பது இரு நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காசாவில் உயிருக்கு பயந்து முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்ப தொடங்கி இருக்கிறார்கள்.

    எகிப்தில் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் முக்கிய மத்தியஸ்தர்களான எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்- சிசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த மாநாட்டில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக எகிப்து செல்வதற்கு முன்பாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

    இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்னதாக டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காசாவில் போர் முடிவுக்கு வந்து விட்டது. காசாவில் மறு கட்டமைப்பை உருவாக்க விரைவில் அமைதி வாரியம் அமைக்கப்படும். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதற்காக கத்தார் பெருமைப்பட வேண்டும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மிக சிறப்பாக பணியாற்றினார்.

    தற்போது அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த தருணத்தை எல்லோரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர். இதுவரை இப்படி நிகழ்ந்தது இல்லை. இந்த போர் நிறுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றுவது பெருமை அளிக்கிறது.

    இதுவரை எப்போதும் நடந்திராத ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். இஸ்ரேலுக்கு பிறகு நாங்கள் எகிப்துக்கு செல்கிறோம். மிகவும் சக்தி வாய்ந்த பெரிய நாடுகள், பணக்கார நாடுகள், பிற நாடுகள் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க போகிறோம். அவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
    • விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர்.

    ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.

    ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
    • பணயக் கைதிகளின் குடும்பத்தினரை டிரம்ப் சந்திக்கிறார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.

    ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

    இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார்.

    இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நடப்பதாக கேள்விப்பட்டேன். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியதும், அதையும் நிறுத்துவேன். காசா போர் என்பது நான் தீர்த்து வைத்த 8வது போராகும்" என்று தெரிவித்தார்.

    • இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • இந்த புகாரை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

    இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்து அதானி குழுமம் நிதி திரட்டிய புகாரை விசாரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நியூயார்க் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

    • தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக Gen-Z போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மடகாஸ்கர் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் Gen-Z போராட்டத்திற்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில், மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற Gen-Z போராட்டத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பெரும்பான்மைக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.
    • எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகள் பெற்று அதிபரானார்.

    விக்டோரியா:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான சீசெல்சில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இந்தத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக அதிபர் வேவல் ராம்கலவன் 46.4 சதவீத வாக்குகளையும், எதிர்க்கட்சி தலைவரான பேட்ரிக் ஹெர்மினி 48.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால் பெரும்பான்மைக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.

    இந்நிலையில், இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் வேவல் ராம் கலவனும், பிரதான எதிர்க்கட்சியான ஹெர்மினி ஐக்கிய செஷெல்ஸ் சார்பில் பேட்ரிக் ஹெர்மினியும் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதிபராக தேர்வு செய்யப்பட்ட பேட்ரிக் ஹெர்மனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    • நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என இருவேறு வேறு இடங்களில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியின் தீவில் பார் ஒன்று உள்ளது. நெரிசலானா பாரில் நுழைந்த மர்மநபர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.

    இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    • நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.
    • மீட்புப் பணிக்காக 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. இந்த கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.

    மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின.

    நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன. 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து இதுவரை 41 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மீட்புப் பணிக்காக 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெற்றம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
    • 58 ரன்கள் எடுத்தபோது, 5 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்துள்ளது.

    ஸ்மிரிதி மந்தனா 58 ரன்களை கடக்கும்போது, ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை தொட்ட வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடத்தில் மட்டும் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்த முதல்  வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    112 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

    ×