என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தியா சிறப்பான நாடு. அங்கு எனது மிகச்சிறந்த நண்பர் (மோடி) தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
    • அவர் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறார்.

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்தம் காரணமாக முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவித்தனர். இதற்கு ஈடாக பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது.

    இதற்கிடையே எகிப்தின் ஷர்ம் அல்‑ஷேக் நகரில் நடந்த காசா அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது கூறியதாவது:-

    இந்தியா சிறப்பான நாடு. அங்கு எனது மிகச்சிறந்த நண்பர் (மோடி) தலைமை பொறுப்பில் இருக்கிறார். அவர் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறார். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாக மிகவும் நன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

    அப்போது தனக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து அப்படிதானே என்று டிரம்ப் சிரித்தபடி கேட்டார். தொடர்ந்து பேசிய டிரம்ப், என்னை பொறுத்தவரை மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப் சிறந்த தலைவர்கள் என்றார். மேலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிரையும் டிரம்ப் பாராட்டினார்.

    • அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • அமைதிக்கான நோபல் பரிசை மரியா டிரம்புக்கு அர்ப்பணித்தார்

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தார்.

    இந்நிலையில், நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாவுக்கு பரிசு அறிவித்ததற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என டிரம்ப் கேட்டார்.
    • இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார்

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக வாழ்வார்கள் என நம்புகிறேன்" என கூறிவிட்டு, பின்புறம் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என கேட்டார்.

    இதனை தொடர்ந்து பேசிய டிரம்ப், "இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார். அவர் அற்புதமான வேலைகளை செய்கிறார்" என்று தெரிவித்தார்.

    • ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.
    • பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக Gen-Z போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.

    இதனிடையே, Gen-Z போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது. 16 ஆண்டுகளில், ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தங்களை வளப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, அதே நேரத்தில் மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில், Gen-Z போராட்டம் தீவிரம் அடைந்ததால் அபதிர் Andry Rajoelina நாட்டை விட்டு வெளியேறினார்.

    ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பொது இடங்களில் அதிபர் காணப்படாததால் அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

    • நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே?
    • டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய டிரம்ப், "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று தெரிவித்தார்.

    மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் டிரம்ப் கிண்டலாக தெரிவித்தார். டிரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    • அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டினார்.
    • டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார்

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்கிறேன். டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார். காஸாவில் தற்போது அமைதியை கொண்டு வந்ததன் மூலம் மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டும்போது இத்தாலி பிரதமர் மெலோனி தனது வாயில் கையை வைத்து கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • ஆக்ஸ்போர்டில் நண்பர்களுடன் சேர்ந்து பாங் குழாய் மூலம் கஞ்சா புகைத்த அந்த இரவுக்குப் பிறகு அனைத்தும் மாறிவிட்டன.
    • என் மீதான தாக்குதலை இவ்வளவு நெருக்கமாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

    நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும், பெண் கல்வி உரிமைக்காகப் போராடியவருமான மலாலா யூசஃப்சாய், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

    பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கில் பெண்கள் கல்விக்காகப் போராடியதற்காக, 2012-ஆம் ஆண்டு தனது 15-வது வயதில் பள்ளிப் பேருந்தில் பயணித்தபோது மலாலாவைத் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

    இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், பிரிட்டனில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது 28 வயதான மலாலா, தன் கணவர் அஸ்ஸர் மாலிக்கோடு இணைந்து பெண் கல்வி செயல்பாட்டாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பர்களுடன் கஞ்சா (Marijuana) உட்கொண்டபோது, 13 ஆண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய தலிபான்களின் நினைவுகள் மீண்டும் துரத்தியதாக அவர் கூறியுள்ளார்.

    தி கார்டியன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஆக்ஸ்போர்டில் நண்பர்களுடன் சேர்ந்து பாங் குழாய் மூலம் கஞ்சா புகைத்த அந்த இரவுக்குப் பிறகு அனைத்தும் மாறிவிட்டன. என் மீதான தாக்குதலை இவ்வளவு நெருக்கமாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. அந்தத் தாக்குதலை நான் மீண்டும் எதிர்கொள்வது போல இருந்தது.

    பேருந்து, துப்பாக்கி வைத்திருந்த நபர், இரத்தம்... எல்லாம் முதல் முறையாகப் பார்ப்பது போல இருந்தது. என் உடல் பயத்தில் நடுங்கியது. என் சொந்த மனதிலிருந்தே என்னால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது" என்று தெரிவித்தார்.

    கஞ்சா போதையில் தான் சுயநினைவை இழந்ததாகவும், நண்பர் ஒருவர்தான் தன்னை அறைக்குத் தூக்கிச் சென்றதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.

    இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தனக்குப் பதட்டத் தாக்குதல்கள் (Panic Attacks), தூக்கமின்மை மற்றும் கடுமையான மனக் கவலைகள் தொடங்கின என்றும் கூறினார்.

    இதன்பின் ஒரு மனநல மருத்துவரை அணுகியபோது, தலிபான் தாக்குதல், அவர்களின் ஆட்சியில் கழித்த குழந்தைப்பருவம், படிப்பு அழுத்தம் போன்றவையே தனது மனக்காயங்களுக்குக் காரணம் என மருத்துவர் அடையாளம் கண்டதாகவும், அவரது உதவியால் அந்தக் கொடூர நினைவுகளில் இருந்து படிப்படியாக மீண்டதாகவும் மலாலா கூறினார்.

    இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் 'Finding my way' என்ற தனது அடுத்த புத்தகத்தில் விரிவாக எழுத உள்ளதாக மலாலா மேலும் தெரிவித்தார்.      

    • டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை"
    • 2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணை மூலம் உக்ரைன் ரஷிய தலைநகர் மாஸ்கோவை எளிதில் தாக்க முடியும்.

    உக்ரைனில் நடக்கும் போர் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷியாவை எச்சரித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாருங்கள், இந்தப் போர் தீர்க்கப்படாவிட்டால், நான் உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்புவேன். டோமாஹாக் ஒரு அற்புதமான ஆயுதம், ரஷ்யா நிச்சயமாக இதை விரும்பவில்லை" என்று கூறினார்.

    டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்த முன்னாள் ரஷிய அதிபரும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், "உக்ரைனுக்கு டோமாஹாக்ஸ் வழங்கப்பட்டால், அது அனைவருக்கும், குறிப்பாக டிரம்பிற்கு ஒரு பிரச்சனையாக இருக்கும். இது ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவது போன்ற மற்றொரு வெற்று அச்சுறுத்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

    2,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் டோமாஹாக் ஏவுகணை மூலம் உக்ரைன் ரஷிய தலைநகர் மாஸ்கோவை எளிதில் தாக்க முடியும். இந்த ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி வேண்டி அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை வைத்துள்ள நிலையில் டிரம்ப் உடைய கருத்து வந்துள்ளது.  

    • ஜிம்பாப்வே நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது.
    • உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர்.

    உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது.

    ஜிம்பாப்வே நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் ஜிம்பாப்வே மற்றும் மாலாவியைச் சேர்ந்த நாட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

    உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    காயமடைந்த 49 பேரில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 31 பேர் தீவிர காயங்களுடனும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    

    • பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது.
    • ஒரு புதிய மற்றும் அழகான நாள் உதயமாகிறது.

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய டிரம்ப், பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது. மனிதாபிமான உதவிகள் இப்போது தாராளமாகப் கிடைத்து வருகின்றன.

    நூற்றுக்கணக்கான லாரிகளில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காசாவிற்குச் செல்கின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள், பிணைக்கைதிகள் குடும்பத்துடன் இணைகிறார்கள். ஒரு புதிய மற்றும் அழகான நாள் உதயமாகிறது. மறுநிர்மாண செயல்முறை இப்போது தொடங்கும்

    இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த நிலையை அடைய நீண்ட காலம் ஆனது. நாங்கள் மிகவும் விரிவாக ஆய்வுப்பின் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திடுகிறோம்" என்று குறிப்பிட்டார்.

    மேலும் இந்த இதை சாத்தியமாக்கிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக மத்தியஸ்தர்களாக முக்கியப் பங்காற்றிய எகிப்து மற்றும் கத்தார் அரசாங்கங்களுக்கு அவர் நன்றி கூறினார்.

     இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டார். இந்திய அரசாங்கத்தின் சார்பாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இதில் பங்கேற்றார். 

    • பதுங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வளைத்துத் தாக்க முயன்றபோது மோதல் வெடித்தது.
    • போர் காரணமாக ஏற்கெனவே பலமுறை இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் இதனால் மீண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

    காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அங்கு ஹமாஸ் அமைப்புக்கும் ஆயுதமேந்திய மற்றொரு குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தெற்கு காசா நகரில் உள்ள டெல் அல்-ஹவா பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் வீரர்கள் டக்முஷ் என்ற ஆயுதக் குழுவினர் பதுங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வளைத்துத் தாக்க முயன்றபோது மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

     இந்தச் சண்டையில் 8 ஹமாஸ் போராளிகளும் எதிர்தரப்பில் 19 பேரும் உயிரிழந்தனர்.

    மேலும் இந்த மோதலில் சலே அல்ஜஃபராவி என்ற 28 வயது பத்திரிகையாளர் மரணித்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது. 

    போர் காரணமாக ஏற்கெனவே பலமுறை இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் இதனால் மீண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

    இரண்டு ஹமாஸ் போராளிகளைத் டக்முஷ் குழு கொன்றதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    • பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் இஸ்ரேல் சென்றிருந்தார்.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.

    அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் உறுப்பினர் உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று புகழாரம் சூட்டினர்.

    அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர். பின்னர் டிரம்ப் தொடர்ந்து உரையாற்றினார்.

    ஐமென் ஓடே மற்றும் ஓஃபர் காசிஃப் அகிய இரண்டு உறுப்பினர்கள்தான் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் இனப்படுகொலை என எழுதப்பட்டிருந்த பதாகையை தூக்கிபிடித்திருந்தார்.

    ×