என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருந்து கவிழ்ந்து விபத்து"

    • ஜிம்பாப்வே நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது.
    • உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர்.

    உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது.

    ஜிம்பாப்வே நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் ஜிம்பாப்வே மற்றும் மாலாவியைச் சேர்ந்த நாட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

    உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    காயமடைந்த 49 பேரில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 31 பேர் தீவிர காயங்களுடனும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    

    • தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
    • மாணவி உட்பட 2 பேர் காயங்களுடன் உயிர்தப்பினர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்ைத சேர்ந்த 500க்கும் மேபட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் உள்ள வாகனம் பல பகுதிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளை அழைத்து வருவது வழக்கம்.

    அதுபோல் இன்று காலையில் மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக மாந்துறை பகுதிக்கு இப்பள்ளி பேருந்து சென்றது. மும்முடி சோழ மங்களம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அங்குராஜ் (50) பேருந்தை இயக்கிச்சென்றார். குழந்தைகளை பாதுகாப்பாக பேருந்தில் ஏற்றி, இறக்க அகிலா (35) என்ற பெண் பணியில் இருந்தார்.

    இந்நிலையில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது. மாந்துறை அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் அகிலா மற்றும் மாணவி சன்மதி (10) ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டது. மேலும் பேருந்தில் இருந்த மற்ற குழந்தைகளும் உயிருக்கு பயந்து கதறினார்கள். இதனை பார்த்த அப்பகுதியினர் அகிலா மற்றும் மாணவி சன்மதியை மீட்டு, லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். விபத்து நடந்ததை கேள்விபட்டு விரைந்து வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இந்த விபத்தில் அந்த இருவரை தவிர அதிர்ஸ்டவசமாக மற்ற யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை. இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    ×