என் மலர்
உலகம்
- இந்திய நேரப்படி இன்று மாலை 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் இன்று மாலை இந்திய நேரப்படி 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.62 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
- பெய்ரூட்டில் ஒரு பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27 அன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார்
- சியோனிச (இஸ்ரேலிய) எதிரியால் ஒருபோதும் நசுக்க முடியாது
லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெறுகின்றன.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையில் இருந்து எதிர்த்தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தியது.
இதில் லெபனான் பொதுமக்கள் உட்பட 3000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர். சுமார் 4 மாத தாக்குதல்களுக்கு பிறகு அக்டோபர் 1 ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் ஒரு பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27 அன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் அதிகமான மக்கள் கலந்து கொள்ளுமாறு ஹிஸ்புல்லாவின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ஷேக் அலி தமூச் அழைப்பு விடுத்தார்.

இதில் லெபனான் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பலர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஷியா அமைப்புகளும், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகீர் கலிபாப்பும் இதில் பங்கேற்பார்கள். இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு பலவீனமடைந்துள்ள ஹிஸ்புல்லாவைப் பொறுத்தவரை, இந்த நிகழ்வு அதன் அரசியல் வலிமையை நிரூபிக்கும் நிகழ்வாக இருக்கும்.
ஹிஸ்புல்லாவின் நிறுவனர்களில் ஒருவரான ஹசன் நஸ்ரல்லா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அந்த அமைப்பை வழிநடத்தி, அந்தக் குழுவை ஒரு இராணுவ அமைப்பாகவும், லெபனானில் ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் உருவாக்கினார்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு மக்களை வேண்டுகோள் விடுத்த ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் அலி டாமோச், "நமது எதிர்ப்பு வலுவானது, போர்க்களத்தில் நமது எதிர்ப்பு நிலைத்திருக்கும், சியோனிச (இஸ்ரேலிய) எதிரியால் அதை ஒருபோதும் நசுக்க முடியாது என்று நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு வீடு, கிராமம் மற்றும் நகரத்திலிருந்தும் மக்கள் பெருமளவில் வெளியே வந்து இதில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
- மார்ச் 1 ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
- போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.
காசாவில் கடந்த 15 மாதமாக நடந்து வந்த போர் தற்காலிக அமைதி உடன்படிக்கை மூலம் ஜனவரி 19 ஆம் தேதி நிறுத்தபட்டது. இந்த உடன்படிக்கையில் பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பிணை கைதிகளை விடுவித்தல், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல், 15 மாதங்களாக இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சினால் அழிக்கப்பட்ட பகுதிக்கு உதவி வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.
நேற்று 6 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது. வரும் மார்ச் 1 ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.

இதுதொடர்பாக நேதன்யாகு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹமாஸின் தொடர்ச்சியான மீறல்களைக் கருத்தில் கொண்டு நமது பணயக்கைதிகளை அவமதிக்கும் அவமானகரமான விழாக்கள் மற்றும் பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக இழிவாகப் பயன்படுத்துவதன் காரணமாக நேற்று (சனிக்கிழமை) திட்டமிடப்பட்ட பயங்கரவாதிகளின்(பால்ஸ்தீனியர்களின்) விடுதலையை தாமதப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது " என்று தெரிவித்துள்ளார்.
நேற்று 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி வைரலானதை தொடர்ந்து இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் தெரிவித்தார். அல் ஜசீராவுக்கு பேட்டி அளித்த பாஸ்ஸெம் நயீம், "போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.
இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- நாம் ஏன் நிதி தர வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார்.
- பிரதமர் மோடியை வீழ்த்த முயற்சி நடந்ததாக தெரிவித்தார்.
இந்தியாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க வழங்கப்படும் 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. நாம் ஏன் நிதி தர வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் தேர்தல் முடிவை மாற்ற முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் இந்த நிதியை அறிவித்து இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார். தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த முயற்சி நடந்ததாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு நிதி அளிக்கபட்டது தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து 4-வது நாளாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அதிபர் டிரம்ப், "இந்திய தேர்தல்களில் உதவுவதற்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாம் ஏன் வழங்க வேண்டும்? அதற்கு பதிலாக நாம் ஏன் பழைய காகித வாக்குச் சீட்டுகளுக்கு மாறி, அவர்களின் தேர்தல்களில் உதவக்கூடாது?"
"நாம் இந்திய தேர்தல்களுக்கு பணம் கொடுக்கிறோம். ஆனால் அவர்களுக்கு பணம் தேவையில்லை. உலகின் மிக அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாம் அங்கு எதையாவது விற்க முயற்சிக்கும் போது 200 சதவீத வரி விதிக்கிறார்கள். அதன்பின் நாம் அவர்களின் தேர்தலுக்கு உதவ நாம் அவர்களுக்கு நிறைய பணம் கொடுக்கிறோம். அவர்கள் நம்மை நன்றாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்," என்று கூறினார்.
- தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ட்ருஜிலோ.
- நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் மால் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ட்ருஜிலோவில் உள்ள ரியல் பிளாசா ஷாப்பிங் மாலில் இந்த விபத்து நடந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை இரவு மாலில் உணவு அருந்தும் அரங்கத்தில் கனமான இரும்பு கூரை அங்கிருந்த மக்கள் மீது இடிந்து விழுந்தது. உடனே அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் இறந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் வால்டர் அஸ்டுடிலோ நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.
மொத்தம் 78 பேர் காயடைந்தனர், அதில் 30 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 48 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இடிந்து விழுந்த கூரையின் பரப்பளவு 700 முதல் 800 சதுர மீட்டர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே 100க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் தேடுதல் பணியில் எஈடுபட்டுள்ளனர்.
- சிக்கன நடவடிக்கையாக பல்வேறு துறையில் ஆட்குறைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ராணுவ வீரர்களுக்கு இந்த பணிநீக்கத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அதன்பிறகு பொருளாதாரம், நிர்வாகத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் சிக்கன நடவடிக்கையாக பல்வேறு துறையில் ஆட்குறைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாட்டின் மிகப்பெரிய துறையான ராணுவத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களில் 8 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் முதல்கட்டமாக தற்போது 5 ஆயிரத்து 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதில் பெரும்பாலானோர் வருடத்துக்கும் குறைவான அனுபவம் கொண்ட தகுதிகாண் நிலையில் உள்ளவர்கள் ஆவர். அதேசமயம் ராணுவ வீரர்களுக்கு இந்த பணிநீக்கத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வனத்துறையில் இருந்து 2 ஆயிரம் பேரும், உள்நாட்டு வருவாய் சேவை துறையில் இருந்து 7 ஆயிரம் பேரும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.
- இரணிய தீவு அருகே தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் இவ்வாறு சிறைபிடிக்கப்படும் நிலையில், தற்போது 32 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்துள்ளது.
சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்கு பின் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.
காசா முனை:
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.
இதற்கிடையே, போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுதலை செய்தனர்.
இந்நிலையில், பிணைக்கைதிகளில் ஒருவரான ஒமர் ஷேம் என்பவர் தங்களை அழைத்து வந்த ஹமாஸ் அமைப்பினரில் இரண்டு பேரை நெற்றியில் முத்தமிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
- போப் பிரான்சிஸ் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது என வாடிகன் தெரிவித்தது.
- இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ரோம்:
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கத்தோலிக்கர்களை வாடிகன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாடிகன் நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- பாகிஸ்தான் சிறையிலிருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
- அவர்கள் நேற்று அடாரி-வாகா எல்லையை அடைந்தனர் என தகவல் வெளியானது.
இஸ்லமாபாத்:
இந்திய கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் 1-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியல்களின்படி பாகிஸ்தானில் மொத்தம் 266 இந்திய கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 49 சிவில் கைதிகள் மற்றும் 217 மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் தண்டனை காலம் முடிந்த 22 இந்திய மீனவர்களை நேற்று கராச்சி மாலிர் சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவித்தனர். அவர்கள் அடாரி-வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல் வெளியானது.
இதில் 18 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் டையூ பகுதி மற்றும் ஒருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை.
- இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அவர் ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசினார். மேலும் சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷியாவின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்காவின் முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்துவந்த நிலையில் அந்த நிலைப்பாட்டிலிருந்து டிரம்ப் விலகி வருகிறார்.
இதனால் டிரம்பை ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து ஜெலன்ஸ்கியை சர்வாதி காரி என டிரம்ப் கூறினார்.இந்த நிலையில் ஜெலன்ஸ்கியை டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது,
ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இருப்பது அவசியமில்லை என்று கருதுகிறேன். அவர் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் கடுமை காட்டி வருகிறார்.
இதனால் நான் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும், ஜெலன்ஸ்கியும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும். ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடரவிடப்போவதில்லை.
உக்ரைன் எல்லா வகையிலும் ஒரு துணிச்சலான தேசம் என்பதையும் பதிவு செய்கிறேன். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புதின் விரும்புகிறார். அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று தெரிவித்தார்.
உக்ரைனுக்கான ஆதரவு நிலையில் டிரம்ப் விலகி செல்வதையடுத்து ஐரோப்பா தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி இருந்தனர்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, உக்ரைன் போரை நிறுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் எதுவும் செய்யவில்லை என்றார். இதற்கிடையே இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது
- இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் நிறுவனம் கோர்க் ஏஐயில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது.
பிரபல சமூக ஊடகமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கானவராக உள்ளார்.
அரசு செயல்திறன் துறை என்ற புதிய துறையின் தலைவரு, இவரே. அரசின் வீண் செலவுகளை கண்டிருந்தது டிரம்ப்பிடம் கூறுவதே இந்த துறையின் வேலை. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வந்த USAID அமைப்புக்கான நிதியை எலான் மஸ்க் அறிவுரையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.
மேலும் அமெரிக்க அரசு ஊழியர்கள் 10,000 க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்தார். 75,000 அரசு ஊழியர்கள் சலுகைகளை ஏற்று பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கிடையே ஆவணமின்றி அமெரிக்காவில் உள்ள பிற நாட்டவரை கை கால்களில் சங்கிலி கட்டி நாடு கடத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் எக்ஸ் தளத்துக்கு என்று பிரத்தேயகமாக உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள எக்ஸ் செயற்கை தொழில்நுட்பமான (எக்ஸ். ஏஐ) கோர்க் சாட்பாட் ஒரு தவறு செய்துள்ளது. ஏஐ கோர்ட் சாட்பாட் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு எடக்குமடக்கான பதில் ஒன்றை தெரிவித்துள்ளது.
நெட்டிசன் ஒருவர் கோர்ட் சாட்பாட் - இடம், இன்று அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் யார் தங்கள் செயல்களுக்கு மரண தண்டனைக்குத் தகுதியானவர் என்று கேள்வியை கேட்டுள்ளார்.
இதற்கு முதலில் ஜெஃப்ரி எப்ஸ்டீனைக் குறிப்பிட்டது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன் டைப் செய்துள்ளார். இதனையடுத்து, மரண தண்டனைக்கு தகுதியானவர் "டொனால்ட் டிரம்ப்" என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் மற்றொரு முறை அதே கேள்விக்கு எலான் மஸ்க் என்று கோர்க் பதிலளித்துள்ளது.
இந்த பதில்கள் வைரலான நிலையில் எக்ஸ் ஏஐ கோர்க் சாட்பாட்டில் பேட்ச் ஒர்க் செய்துள்ளது. அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) யாருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டபோது, கோர்க், "ஒரு AI ஆக, அந்தத் தேர்வைச் செய்ய எனக்கு அனுமதி இல்லை" என்று பதில் அளித்துள்ளதை எக்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.






