என் மலர்
உலகம்
- இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், இந்தியா காண்பிக்கட்டும்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த விழாவில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், "ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. அதேவேளையில் நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாகிஸ்தான் படைகள் முழு திறனுடனும் தயாராகவும் உள்ளன.
பஹல்காமில் சமீபத்தில் நடந்த சோகம் இந்த நிரந்தர பழி சுமத்தும் விளையாட்டின் மற்றொரு எடுத்துக்காட்டு. இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது" என்று தெரிவித்தார் .
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர், "இந்தியா பழி போடுகிறது... ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும். நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது. பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்" என்று தெரிவித்திருந்தார்.
- இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது
- லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. 500-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்று பாகிஸ்தானை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அவர்கள் தேசிய கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அதிக சத்தத்துடன் இசையை இசைக்க வைத்தனர். தூதரக மாடியில் நின்று கொண்டு இருந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் விமானப்படையின் ஆலோசகருமான கர்னல் தைமூர் ரஹத், போராட்டம் நடத்திய இந்தியர்களை பார்த்து கழுத்தை அறுப்பது போன்ற சைகையை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- பாகிஸ்தானுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துள்ளது.
- உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பாகிஸ்தானுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, எல்லைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.
இதையடுத்து பாகிஸ்தானும் பதிலடியாக இந்திய விமானங்கள் தங்களது நாட்டு வான் எல்லையை பயன்படுத்த தடை விதித்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ் டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்த பாகிஸ்தான், இத்தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா முகமது ஆசிப் கூறியதாவது:-
பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச ஆய்வாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பாகிஸ்தான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. இந்தப் போர் வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இந்தப் போர் வெடிப்பது இந்தப் பிராந்தியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.
பயங்கரவாத தாக்குதலின் பின்விளைவை இந்தியா ஒரு சாக்காகப் பயன்படுத்தி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து உள்ளது. உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.
எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானைத் தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா செயலிழந்து போய் இருக்கிறது. பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தாக்குதல்களைத் திட்டமிடவோ அல்லது நடத்தவோ எந்த திறனும் அந்த அமைப்பிடம் இல்லை.
அந்த அமைப்பில் உள்ள எஞ்சியிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுக் காவலில் உள்ளனர், மேலும் சிலர் காவலில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் விடுமுறைகளை அரசு ரத்து செய்துள்ளது. மேலும் பலூச் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் இருந்து வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் எல்லையில் வீரர்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
- பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல்.
- இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன்.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22-ந்தேதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்.
மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் ஒரு மோசமான தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கிற்காக ரோமுக்கு பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், இது சமீபத்திய காலங்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், உங்களுக்குத் தெரியும். மேலும் அவர்கள் காஷ்மீரில் 1,000 ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அநேகமாக அதை விட நீண்ட காலம் இருக்கலாம். இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் இதற்கு ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ தீர்வை கண்டுபிடித்துவிடுவார்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்றார்.
- இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் சகோதர நாடுகள்.
- மற்ற நட்பு நாடுகளைப் போல அவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
டெஹ்ரான்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என ஈரான் மந்திரி சயீது அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஈரான் வெளியுறவு மந்திரி சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் சகோதர நாடுகள். எங்கள் இடையே நூற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளன. மற்ற நட்பு நாடுகளைப் போல அவர்களுக்கும் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
- கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகனில் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வாடிகன் சிட்டி:
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), கடந்த 21-ம் தேதி காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறுகிறது. வாடிகனில் திரண்டுள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகன் சிட்டி சென்று போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களில் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது என வாடிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நியூ ஜெர்சி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
- காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 13,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது.
கடும் புகை மூட்டம் காரணமாக அவ்வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் இருந்து 5,000-க்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதையடுத்து அங்கு மாநில அளவிலான அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளது. இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் தேதி உயிரிழந்தார்.
- போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார்.
வாடிகன் சிட்டி:
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88), கடந்த 21-ம் தேதி காலை 7.35 மணிக்கு உயிரிழந்தார். கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் திரண்டுள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
போப் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வாடிகன் சிட்டி சென்றுள்ளார். அங்கு போப் பிரான்சின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2012 முதல் போப் ஆண்டவராக இருந்த பிரான்சிஸ் தனது எளிமை மற்றும் ஏழைகளிடம் காட்டிய இரக்க சிந்தைக்காக போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த பிறகு வங்கதேசம் சுதந்திரம் நாடான அறிவிக்கப்பட்டது.
- இந்தக் கோட்டை மீறுவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்துவதை நாங்கள் தவிர்ப்போம்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து சிம்லா ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் ரத்து செய்தது.
சிம்லா ஒப்பந்தம்:
1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை மீட்டெடுப்பதையும் உறவுகளை இயல்பாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, சிம்லா ஒப்பந்தம் ஜூலை 2, 1972 அன்று கையெழுத்தானது.
போரில் இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து, கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக மாறியது. கிழக்கு பாகிஸ்தானில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த பிறகு வங்கதேசம் சுதந்திரம் நாடான அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் - இந்தியா போர் நிறுத்தம் ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது.
ஒப்பந்தத்தின் முக்கிய விதிகள்:
டிசம்பர் 17, 1971 அன்று ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டை இரு நாடுகளும் முன்நிபந்தனைகளும் இல்லாமல் மதிக்கும். இந்தக் கோட்டை மீறுவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்துவதை நாங்கள் தவிர்ப்போம் என்ற வாக்குறுதிகள் இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, போரின் போது கைப்பற்றப்பட்ட 13,000 சதுர கிலோமீட்டர் நிலம் இந்தியாவிடம் திரும்ப வழங்கப்பட்டது. சிம்லா ஒப்பந்தத்தின்படி காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு நிறுவப்பட்டது.
இந்த வழித்தடத்தை ஒருதலைப்பட்சமாக மாற்ற எந்த முயற்சியும் இருக்காது என்றும் ஒப்பந்தம் கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும் வரையறுப்பதற்கும் சிம்லா ஒப்பந்தம் ஒரு முக்கிய ராஜதந்திர மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
- புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
- இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 70 ராணுவ வீரர்களை கொன்றதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
மாலியை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, சமீபத்தில் தனது செயல்பாடுகளை பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
வடக்கு பெனினில் கிளர்ச்சியாளர்கள் செயல்படத் தொடங்கியதிலிருந்து இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து அட்டாரி- வாகா எல்லையை மூடியது.
- இரு நாடுகளும் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரிதுள்ளன. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து அட்டாரி - வாகா எல்லையை மூடியது. பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசாக்களையும் இந்தியா ரத்து செய்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்து. சிம்லா ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. மேலும் சிந்து நதி நீரைத் தடுப்பது போர் அறிவிப்பாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்நிலையில் பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) வலியுறுத்தியுள்ளது.
பதட்டமான சூழ்நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்க இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டிப்பதாக தெரிவித்த ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், நிலைமை மோசமடைவதைத் தடுக்க இரு நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகளை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இரு நாட்டு உறவும் மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் மிகவும் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
- 26 சதவீத பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 8 ஆம் தேதியுடன் மீண்டும் வரி அமலுக்கு வர உள்ளது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா மாறக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இந்திய ஏற்றுமதிகள் மீதான 26 சதவீத பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 8 ஆம் தேதியுடன் மீண்டும் வரி அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் ஸ்காட் பெசன்ட் பேசியதாவது, "இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முடிவை எட்ட உள்ளன.
இந்தியாவுடன் குறைந்த எண்ணிக்கையில்தான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்தியா தன்னிச்சையாக ரூபாய் மதிப்பை மாற்றியமைப்பதில்லை. எனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கும் மிக எளிதான விஷயமாகவே உள்ளது. வரி விதிப்பு விஷயத்தில் பிற நாடுகளும் இதேபோல நடந்து கொள்ள வேண்டும் என்று அதிபா் டிரம்ப் என்று விரும்புகிறாா்" என்று தெரிவித்தார்.






