என் மலர்
உலகம்
- பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
- பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடப்பது இயல்பாகி விட்டது.
காஷ்மீரில் உள்ள சுற்றுலா பகுதிகளான ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடக்கின்றன.
ஆகவே, அமெரிக்கர்கள் யாரும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்ல வேண்டாம். (கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகரான லேவுக்கு செல்ல விலக்கு அளிக்கப்படுகிறது).
மேலும், துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்புள்ளதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
- கீவ் மீதான ரஷியாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது.
- இது தேவையில்லாதது. மேலும் மிகவும் மோசமான நேரம்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 3 வருடங்கள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா, தற்போது உக்ரைனுடன் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தற்போது 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா பயங்கர வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
சமீபத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் கீவ் மீதான தாக்குதலை தொடர்ந்து புதினை டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
கீவ் மீதான ரஷியாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது தேவையில்லாதது. மேலும் மிகவும் மோசமான நேரம். புதின், நிறுத்துங்கள்..! வாரத்திற்கு 5 ஆயிரம் வீரர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிக்கலாம்..!
இவ்வாறு டிரம்ப் தனது TRUTH சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமர் பேச்சு.
ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர் பேசியுள்ளார்.
அப்போது அவர், "இந்தியா பழி போடுகிறது... ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.
இதுகுறத்து அவர் மேலும் கூறுகையில்," நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது.
பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்" என்றார்.
- இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
- பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்சவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி சாத் அகமது வார்ரைச்சுக்கு ஏற்கனவே இந்தியா சம்மன் அனுப்பிய நிலையில், இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
- போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் உஷார் நிலையில் உள்ளனர். எல்லையில் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு தமது முப்படைகளுக்கும் பாகிஸ்தான் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா பதிலடி கொடுத்தால் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ராணுவத்திற்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
- பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இன்று இந்தியா நிறுத்தியது.
- சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன் எதிரோலியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் நதி நீரை நிறுத்தியது போர் நடவடிக்கை ஆகும் எனவும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
- எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வழியே நடைபெறும் வர்த்தகம் முடங்கியது.
இந்தியாவுடனான எல்லை மூடப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
வாகா எல்லை மூடப்படுவதாக இந்தியா அறிவித்த நிலையில் பாகிஸ்தானும் அறிவித்துள்ளது.
பரஸ்பரம் எல்லை மூடப்படுவதாக இரு நாடுகளும் அறிவித்ததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வழியே நடைபெறும் வர்த்தகம் முடங்கியது.
மேலும், இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
3வது நாடுகள் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் உள்பட நிறுத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
- பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
- தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்தது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இன் பயன்படுத்த முடியாது
தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்தது.
இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்தக் கூடாஐ என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
- 6 குழந்தைகள் உள்பட 63-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரஷியா ஆக்கிரமிப்பு கிரிமியா உள்ளிட்ட பகுதிகளை உக்ரைன் விட்டுக் கொடுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் கீவ் நகரில் உள்ள 4-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் மீது ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 6 குழந்தைகள் உள்பட 63-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் ராணுவம் கூறியதாவது, ரஷியா நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் தகர்க்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 42-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களில் தீ பற்றி எரிந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்கா தலைமையிலான ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்காக லண்டனில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகக் கூறப்பட்ட சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதலானது நடந்துள்ளது. ரஷியா ஆக்கிரமிப்பு கிரிமியா உள்ளிட்ட பகுதிகளை உக்ரைன் விட்டுக் கொடுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.
- பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போர்ப் பதற்றம் எழுந்துள்ளது.
- G7 குழுவில் உறுப்பினராக நாடுகளில் கனடா மட்டும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தது.
- அர்த்தமற்றதும் அதிர்ச்சியூட்டும்துமான வன்முறைச் செயலாகும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவை உள்ளடக்கிய G7 குழுவில் உறுப்பினராக நாடுகளில் கனடா மட்டும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தது. கனடாவின் மௌனம் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் தாக்குதல் நடந்து 30 மணி நேரம் கழித்து அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மார்க் கார்னி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் அதிர்ச்சியடைந்தேன். அப்பாவி பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கொன்று காயப்படுத்தியது அர்த்தமற்றதும் அதிர்ச்சியூட்டும்துமான வன்முறைச் செயலாகும்.
கனடா இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலியேவ் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்திருந்தார். கனடாவுடன் இந்தியாவின் உறவு சமீப காலங்களாக நன்முறையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
- உள்நாட்டு அழுத்தத்தின் கீழ் இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்தால், பாகிஸ்தான் முழுமையாக பதிலடி கொடுக்கும்.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. பாகிஸ்தானுடன் உறவு துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழுவின் கூட்டத்தை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூட்டியுள்ளார். இக்கூட்டம் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி வழங்க முடிவுகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி பாகிஸ்தான் இன்று அவசர ஆலோசனையை நடத்துகிறது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறும்போது, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
உள்நாட்டு அழுத்தத்தின் கீழ் இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்தால், பாகிஸ்தான் முழுமையாக பதிலடி கொடுக்கும். அந்த திறன் பாகிஸ்தானுக்கு இருக்கிறது என்றார்.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் கூறும்போது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருதலைபட்சமாக நிறுத்தி வைக்க முடியாது. ஏனென்றால் இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை மட்டுமல்ல, உலக வங்கி உள்பட பிற பங்குதாரர்களையும் உள்ளடக்கியது என்று தெரிவித்தது.






