search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சியோமாரா காஸ்ட்ரோ
    X
    சியோமாரா காஸ்ட்ரோ

    ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக சியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்பு

    ஹோண்டுராஸ் நாட்டின் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் தைவான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
    டெகுசிகல்பா:

    லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்துவந்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில் நஸ்ரி அஸ்புராவும், அவரை எதிர்த்து இடதுசாரி கட்சியான சுதந்திர கட்சியின் சார்பில் சியோமாரா காஸ்ட்ரோவும் போட்டியிட்டனர். இவர் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் மானுவல் ஜெலயாவின் மனைவி ஆவார்.

    அதிபர் தேர்தலின் முடிவுகளின்படி சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் 12 ஆண்டுக்குபின் அந்நாட்டில் இடதுசாரி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் என்கிற பெருமையையும் சியோமாரா காஸ்ட்ரோ பெற்றுள்ளார்.

    இந்நிலையில், ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக சியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்றுக் கொண்டார். இதில் அமெரிக்க துணை அதிபர்  கமலா ஹாரிஸ் பங்கேற்றார். அதிபராக பொறுப்பேற்று பேசிய காஸ்ட்ரோ, நாட்டின் கடன் சுமையை சரிசெய்வதாக கூறினார். 

    Next Story
    ×