search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சார்லஸ் மெக்கீ
    X
    சார்லஸ் மெக்கீ

    அமெரிக்காவில் 102 வயது போர் விமானி மரணம்

    அமெரிக்க ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடிய போர் விமானி (102 வயது )சார்லஸ் மெக்கீ மேரிலாந்து, பெதஸ்தாவில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.
    வாஷிங்டன் :

    அமெரிக்க ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடியவர், போர் விமானி சார்லஸ் மெக்கீ. 102 வயதான இவர் நேற்று முன்தினம் மேரிலாந்து, பெதஸ்தாவில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார். இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “போர் விமானி சார்லஸ் மெக்கீ ஞாயிற்றுக்கிழமையன்று தூக்கத்திலேயே இறந்தார், அவர் தனது வலது கையை இதயத்தின் மீது வைத்திருந்தார், அமைதியாக சிரித்தவாறு உயிர் பிரிந்திருந்தது” என கூறப்பட்டுள்ளது.

    அவரது மறைவுக்கு அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில், “இன்று ஒரு அமெரிக்க வீரரை இழந்துள்ளோம். அவரது இறப்பால் நான் வருந்துகிறேன். அவரது தியாகம், குணாதிசயங்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்” என கூறி உள்ளார்.

    இவர் தனது 23 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×