என் மலர்

  உலகம்

  எண்ணெய் டேங்கர் தீப்பிடித்ததால் எழுந்த கரும்புகை
  X
  எண்ணெய் டேங்கர் தீப்பிடித்ததால் எழுந்த கரும்புகை

  அபுதாபியில் ட்ரோன் தாக்குதல்- 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ட்ரோன் தாக்குதலுக்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி என்ற கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  துபாய்: 

  ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ட்ரோன் மூலம் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் 3 எரிபொருள் டேங்கர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. மற்றொரு தாக்குதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்டுள்ளது. 

  எரிபொருள் டேங்கர் வெடித்ததில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.

  இந்த ட்ரோன் தாக்குதலுக்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி என்ற கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  Next Story
  ×