search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அமெரிக்காவில் சிங்கம், புலி, சிறுத்தைக்கு கொரோனா

    அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் பல வகையான விலங்குகளையும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் மிசவுரி மாகாணம், செயிண்ட் லூயிஸ் நகரில் உயிரியல் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பூங்காவில் பல வகையான விலங்குகளையும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2 ஆப்பிரிக்க சிங்கங்கள், ஒரு அமுர் புலி, ஒரு மலைச்சிங்கம், 2 சிறுத்தைப்புலி ஆகியவற்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்படி இவற்றுக்கு கொரோனா தொற்று பரவியது என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த உயிரியல் பூங்கா ஊழியர் கூறினார். இந்த விலங்குகளுக்கு லேசான அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்த உயிரியல் பூங்காவில் உள்ள பிற 12 ஆயிரம் விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை.
    Next Story
    ×