search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமன் கிணறு
    X
    ஏமன் கிணறு

    ஏமன் நாட்டில் 367 அடி மர்ம கிணறு - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆராய்ச்சியாளர்கள்

    ஏமனில் காணப்படும் 367 அடி ஆழமுள்ள கிணற்றில் செய்யப்படும் ஆய்வில் பல ஆச்சரியங்கள் கிடைக்கும் என அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்தது.
    சனா:

    ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு உள்ளது. இந்த கிணறை அப்பகுதி மக்கள் பர்ஹட்டின் கிணறு என அழைக்கின்றனர். இந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாக வதந்தி பரவியது.

    இந்நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த 10 பேர் கொண்ட ஆராய்ச்சிக் குழுவினர் துணிச்சலுடன் அந்தக் கிணற்றில் இறங்கி ஆய்வு செய்தனர்.

    இதுதொடர்பாக ஆய்வுக்குழு தலைவர் கூறுகையில், இந்தக் கிணறு குகைபோல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கிறது. மேலும் அதிகமான பாம்புகள், இறந்த விலங்குகள் மற்றும் குகை முத்துக்கள் இருக்கின்றன. இங்கு எந்த பூதமும் இல்லை என தெரிவித்தார். 

    பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்துகிடப்பதாலேயே துர்நாற்றம் வீசுகிறது. இது பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பழமையானது என மதிப்பிட்டுள்ளோம். இந்த கிணறு ஏமன் நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என நம்புகிறோம். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.
    Next Story
    ×