search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால்கான் ராக்கெட் அட்லாண்க் கடலோரத்தில் வெற்றிகரமாகவும் இறங்கிய காட்சி
    X
    பால்கான் ராக்கெட் அட்லாண்க் கடலோரத்தில் வெற்றிகரமாகவும் இறங்கிய காட்சி

    4 பேருடன் விண்வெளி சுற்றுப்பயணம் - வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் கேப்ஸ்யூல்

    விண்கலத்தில் சென்ற 4 பேரும் இசைக்கருவி வாசிப்பது போலவும், ஓவியம் வரைந்தும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

    நியூயார்க்:

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த வியாழன் அன்று 4 பேரை மூன்று நாள் சுற்றுப்பயணமாக விண்ணுக்கு அனுப்பியது.

    இன்ஸ்பிரே‌ஷன் 4 என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி பயணத்தில் ஐசக் ஜாரெட் ஐசக், ஷேலி ஆர்சனாக்ஸ், சியான் பிராக்டர், கிறிஸ் செம்பிராஸ்கி உள்ளிட்ட 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் கேப்ஸ்யூல் மூலம் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரெல் ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட்டில் விண்வெளிக்குப் புறப்பட்டனர்.

    தானியங்கி முறையில் செயல்படும் இந்த ராக்கெட் புறப்பட்ட 12 நிமிடங்களில் விண்கலத்தை சுற்று வட்டப்பாதையில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்குத் திரும்பியது.

    கோப்புபடம்

    வெறும் மூன்று மணி நேரத்தில் 585 கி.மீ.உயரத்தை விண்கலம் அடைந்தது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட 160 கி.மீ. அதிக உயரமாகும்.

    திட்டமிட்டபடி இலக்கை அடைந்த டிராகன் விண்கலம் பூமியை படம் பிடித்து அனுப்பியது. விண்கலத்தில் சென்ற 4 பேரும் இசைக்கருவி வாசிப்பது போலவும், ஓவியம் வரைந்தும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

    3 நாட்கள் விண்வெளி பயணத்துக்கு பிறகு அட்லாண்டிக் கடலில் பால்கான் ராக்கெட் தரையிறங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. 3 நாள் பயணத்தை நிறைவு செய்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் புளோ ரிடாவின் அட்லாண்க் கடலோரத்தில் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் இறங்கியது. சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு பாராசூட் மூலம் இறங்கிய இந்த விண்கலம். விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும்போது அதிகப்படியான வெப்ப நிலையில் இருக்கும் அதனால் விண்கலத்தின் கேபின் சூடுபிடித்தால் அவற்றை குளிர்விக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    விண்கலத்தின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலை 3, 500 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இதனால் உள்ளே இருக்கும் வீரர்கள் ஒரு மணி நேரம் கழித்தே வெளியே அழைத்து வரப்படுவர் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. 

    Next Story
    ×