search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறைச்சாலைக்கு வந்த ஆம்புலன்ஸ்கள்
    X
    சிறைச்சாலைக்கு வந்த ஆம்புலன்ஸ்கள்

    ஹோண்டுராஸ் சிறையில் கைதிகள் பயங்கர மோதல்- 5 பேர் உயிரிழப்பு

    ஹோண்டுராஸ் நாட்டில் 2019ம் ஆண்டில் இருந்து சிறைச்சாலைகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
    டெகுசிகல்பா:

    ஹோண்டுராஸ் நாட்டின் டெகுசிகல்பா அருகில் லா டோல்வா சிறைச்சாலை உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட இந்த சிறைச்சாலையில், நேற்று திடீரென கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. சிபாரியோ-18 என்ற குழுவினருக்கும், அவர்களின் பரம எதிரியான மாலா சால்வட்ருச்சா-13 என்ற குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில், 5 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    சுமார் 3 மணி நேரம் இந்த சண்டை நடந்ததாகவும், கையெறி குண்டு வீசி தாக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டுராஸ் நாட்டில் 2019ம்ஆண்டில் இருந்து  சிறைச்சாலைகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிறைச்சாலைகளில் இரண்டு முக்கிய தாதா கும்பல்களுக்கு இடையே அடிக்கடி 
    மோதல்
     ஏற்படுகிறது. இதுதவிர குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களும் மோதிக்கொள்கின்றன. இதனால் ஏராளமான வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன. 

    ஹோண்டுராஸ் நாட்ல் 25 சிறைச்சாலைகளில் அளவுக்கு மீறி கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், கைதிகளுக்கு சரியான உணவு, சுகாதார வசதிகள் இல்லை என்றும் மனித உரிமைகள் அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
    Next Story
    ×