என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை: டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளது
Byமாலை மலர்6 Jun 2021 4:58 PM GMT (Updated: 6 Jun 2021 5:34 PM GMT)
இங்கிலாந்து அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன், அரச குடும்பத்தில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி இளவரசர் ஹாரி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சகோதரர் வில்லியம் உடன் இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து வந்தார்.
அதன்பின் அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறி மனைவியுடன் அமெரிக்கா சென்றுவிட்டார். ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலிசபெத் ராணியின் (ஆர்ச்சி ஹாரிசன் மவுன்ட்பேட்டன்-வின்ட்சர்) பெயரை சூட்டியிருந்தது.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி (நேற்றுமுன்தினம்) இந்த தம்பதிக்கு கலிபோர்னியாவில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஹாரி, மறைந்த தனது தாயார் டயானாவின் (லிலிபெட் லிலி டயானா) பெயரை சூட்டியுள்ளார்.
தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவர்களுடைய பத்திரிகை செயலாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
×