search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுனைடெட் ஏர்லைன்ஸ் வாங்கும் விமானத்தின் டிஜிட்டல் மாடல்
    X
    யுனைடெட் ஏர்லைன்ஸ் வாங்கும் விமானத்தின் டிஜிட்டல் மாடல்

    3.5 மணி நேரத்தில் லண்டனில் இருந்து நியூயார்க் போகலாம்... மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்

    அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 15 சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை வாங்குவதற்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 15 புதிய சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. 

    இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ், 2029ம் ஆண்டு விமானம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது. 

    இந்த விமானத்தில் அட்லாண்டிக் வழித்தடத்தில் பயணித்தால் பயண நேரம் பாதியாக குறையும். உதாரணமாக, லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3.5 மணி நேரத்தில் செல்ல முடியும். யுனைடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

    கான்கார்டு சூப்பர்சோனிக் விமானம்

    பயணிகள் விமான சேவையில் 1976ம் ஆண்டு நுழைந்த கான்கார்டு சூப்பர்சோனிக் விமானங்கள், 2003ம் ஆண்டு தரையிறக்கப்பட்டன. நடைமுறை சிக்கல் மற்றும் விபத்துகளைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு அனைத்து கான்கார்டு விமானங்களுக்கும் ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஓய்வு கொடுத்தது. 

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு அத்தகைய விமானங்களை இயக்குவதற்கான பணிகளை யுனைடெட் ஏர்லைன்ஸ் தொடங்கி உள்ளது.
    Next Story
    ×