search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுந்தர் பிச்சை
    X
    சுந்தர் பிச்சை

    புதிய டிஜிட்டல் விதிமுறைகளை பின்பற்றுவோம் - கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை உறுதி

    இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய டிஜிட்டல் சட்ட விதிமுறைகளை அமல்படுத்த டிவிட்டர் நிறுவனம் அவகாசம் கோரியுள்ள நிலையில் அதனை விரைவில் செயல்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

    புதிய டிஜிட்டல் விதிமுறைகள் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் இந்திய அரசுடன் விவாதிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். அரசு உருவாக்கும் சட்ட விதிமுறைகளை கூகுள் நிறுவனம் மதிப்பதாகவும் ஆனால் தேவைப்படும் சமயங்களில் சில சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்துவோம் எனவும் அவர் கூறினார். 

    சுதந்திரமான இணைய சேவை என்பது அடிப்படையான விஷயம் என கூறிய அவர் இந்தியாவிற்கு இதற்கு நீண்ட பாரம்பரியம் உள்ளது என சுட்டிகாட்டினார். சுதந்திரமான இணையத்தின் முக்கியத்துவம் பற்றி கூகுல் நிறுவனம் உறுதியாக உள்ளதாகவும் இதைப்பற்றி உலகெங்கும் உள்ள அரசுகளிடம் பேச்சுவார்த்தை தொடரும் எனவும் அவர் கூறினார்.
    Next Story
    ×