search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர்
    X
    பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர்

    சீனாவில் பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு - அமெரிக்கா கண்டனம்

    பிபிசி செய்தி ஒளிபரப்பிற்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

    தற்போது உலக வல்லுநர்கள் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் ஜிங்ஜியாங் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டும் உள்ளது.

    இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சினை குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டியது. இதையடுத்து, பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதிக்க இருப்பதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில், பிபிசி உலக செய்திகள் ஒளிபரப்பிற்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்கா பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் நீட் பிரைஸ் கூறுகையில், பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதன்மூலம் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×