என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க விண்வெளிப்படை பிரிவினருக்கு ‘கார்டியன்ஸ்’ என பெயர் வைப்பு
Byமாலை மலர்19 Dec 2020 12:10 AM GMT (Updated: 19 Dec 2020 12:10 AM GMT)
அமெரிக்க விண்வெளிப்படை வீரர்கள் ’கார்டியன்ஸ்’ என அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும் தங்கள் பலத்தை அதிகரிக்கும் வகையிலும் பாதுகாப்புத்துறைக்கு அதிக அளவில் செலவிட்டு வருகின்றன.
நவீன ஆயுதங்கள் கண்டுபிடிப்பு, அணு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் பலத்தை உயர்த்திவருகின்றன. பாதுகாப்பு துறையில் தரைப்படை, கடற்படை,விமானப்படை என மூன்று படைப்பிரிவுகள் உள்ளது.
அந்த வகையில், மற்றநாடுகளை விட ஒருபடி மேலே சென்றுள்ள அமெரிக்கா ‘ஸ்பேஸ் போர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விண்வெளிப்படையை உருவாக்கியுள்ளது. இந்த படைப்பிரிவில் மொத்தம் 16 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த விண்வெளிப்படை அமெரிக்க தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் உள்ளிட்ட சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த படைப்பிரிவில் உள்ள வீரர்களை எப்படி அழைப்பது என எந்தவித அதிகாரப்பூர்வமாக பெயரும் வைக்கப்படாமல் இருந்தது.
இதனால், இந்த விண்வெளிப்படை பிரிவினரை எவ்வாறு அழைப்பது என்பது குறித்து யோசனைகள் அளிக்க அமெரிக்க விண்வெளிப்படை பொதுமக்களிடம் கருத்துக்கேட்டது. அதில் பெரும்பாலானோர் இந்த படை வீரர்களை ’கார்டியன்ஸ்’ என அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில், அமெரிக்க விண்வெளி படையின் பணியாற்றும் வீரர்கள் ’கார்டியன்ஸ்’ என அழைக்கப்படுவார்கள் என இன்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க விண்வெளி படையினர் இனி ‘கார்டியன்ஸ்’ என அழைக்கப்பட உள்ளனர். இந்த பெயர் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியிட உள்ளார்.
Next Story
×