search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துருக்கி நிலநடுக்கம்
    X
    துருக்கி நிலநடுக்கம்

    துருக்கி நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட கட்டடம் இடிந்து சேதம்: 4 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்

    துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட கட்டடம் இடிந்து தரைமட்டமானதாக துருக்கி முதற்கட்ட தகவலாக தெரிவித்துள்ளது.
    துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

    துருக்கி நிலநடுக்கம்

    இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தனர். கட்டட இடிபாட்டிற்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்ததாகவும், 120 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளனர்.

    துருக்கி நிலநடுக்கம்

    கட்டட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடம் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றன. கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை.
    Next Story
    ×