search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல் சம்பவம் நடந்த தேவாலயம்
    X
    தாக்குதல் சம்பவம் நடந்த தேவாலயம்

    பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் - ஐரோப்பிய கவுன்சில் கண்டனம்

    பிரான்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஐரோப்பிய கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
    லண்டன்:

    கொரோனா வைரஸ் பரவலால் பிரான்ஸ் நாடு நிலைகுலைந்து போய் உள்ளது. அங்கு நேற்று முதல் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

    இந்த தருணத்தில் நேற்று அங்குள்ள நைஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கரவாதி ஒருவன் கையில் கத்தியுடன் நுழைந்தான். அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளானவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றமுடன் நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.

    தகவலறிந்த போலீஸ் படையினர் அங்கு மின்னல் வேகத்தில் விரைந்தனர். அதற்குள் அவனது தாக்குதலில் 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். அவன் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியபோதும், போலீசாரால் கைது செய்யப்பட்டபோதும் மத ரீதியிலான கோஷம் போட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. போலீசார் சுட்டதில் படுகாயம் அடைந்த பயங்கரவாதி, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளான்.

    இந்நிலையில், பிரான்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஐரோப்பிய கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஐரோப்பிய கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், பிரான்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் நாங்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடைகிறோம். இதுபோன்ற தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.  

    பயங்கரவாதம் மற்றும் வன்முறை பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் பிரான்சுடனான ஒற்றுமையில் நாங்கள் உறுதியாகவும் நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×