search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணில் இருந்து கார்னியா அகற்றப்படும் காட்சி.
    X
    கண்ணில் இருந்து கார்னியா அகற்றப்படும் காட்சி.

    பார்வை குறைபாடுடன் பிறந்த 4 மாத குழந்தைக்கு ‘கார்னியா’ மாற்று அறுவை சிகிச்சை

    அபுதாபியில் பார்வை குறைபாடுடன் பிறந்து 4 மாதங்களே ஆன பெண் குழந்தைக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் ‘கார்னியா’ மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
    அபுதாபி:

    அபுதாபியில் அமீரகத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதில் தொடக்கத்தில் அந்த குழந்தைக்கு பார்வை குறைபாடு இருப்பதை அதன் பெற்றோர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. சில வாரங்கள் கடந்து அந்த குழந்தையால் பார்க்க முடியவில்லை என்பதை அறிந்து அந்த பெற்றோர்கள் வேதனையடைந்தனர்.

    தங்கள் குழந்தைக்கு பார்வை கிடைக்க வேண்டும் என அபுதாபியில் உள்ள ஷேக் கலீபா மருத்துவ நகரத்திற்கு சென்று அங்குள்ள கண் மருத்துவ நிபுணர்களிடம் பரிசோதனை செய்தனர். அந்த குழந்தையை பரிசோதனை செய்ததில் ‘கார்னியா‘ எனப்படும் கண்களின் முன் அடுக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பிறகு அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைக்க மருத்துவ குழுவினர் தயாரானார்கள்.

    ‘கார்னியா’ மாற்று சிகிச்சை என்பது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றதாகும். ஏற்கனவே கண்தானம் அளித்தவரிடம் இருந்து அதனை பெறலாம். இதற்காக அமீரக குழந்தைக்கு அமெரிக்காவின் கண் வங்கியிடம் இருந்து 2 கார்னியா அடுக்குகள் பெறப்பட்டது. பின்னர் அபுதாபிக்கு வரவழைக்கப்பட்டு ஷேக் கலீபா மருத்துவ நகரத்தின் கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முராத் மனியா அல் ஒப்தானி தலைமையில் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கண் அறுவை சிகிச்சையில் குழந்தையின் சேதமடைந்த கார்னியா அடுக்குகள் அகற்றப்பட்டு கொடையாக பெறப்பட்ட 2 கார்னியா அடுக்குகளை வெற்றிகரமாக அந்த குழந்தையின் கண்களில் பொருத்தினர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த குழந்தைக்கு பார்வை கிடைத்துள்ளது. பெற்றோர்களை முதல் முறையாக அந்த குழந்தை பார்த்த தருணத்தில் பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சி அங்கிருந்த மருத்து நிபுணர்கள் உள்பட அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
    Next Story
    ×