search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமலா ஹாரிஸ்
    X
    கமலா ஹாரிஸ்

    தேர்தல் பிரசாரத்தின்போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ்

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரத்தின் போது பெய்த மழையில் நடனமாடினார் கமலா ஹாரிஸ்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வகையில் ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார்.

    தேர்தலில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதி; முதல் கறுப்பின பெண் துணை ஜனாதிபதி; முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி; முதல் இந்திய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி; முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி என பல சாதனைகளை பதிவு செய்வார்.

    தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று முன்தினம் அவர் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு திடீரென மழை பெய்ததது. 

    ஆனாலும் கமலா ஹாரிஸ் குடையை பிடித்துக் கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்தார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குடையை பிடித்தபடியே மழையில் நடனமாடினார். இதை அவரது ஆதரவாளர்கள் பலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    இதனிடையே குடையுடன் தான் நடனமாடும் புகைப்படத்தை கமலா ஹாரிஸ் டுவிட்டரில் பகிர்ந்து “மழையோ அல்லது வெயிலோ ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது” என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×