search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகேஷ் அம்பானி
    X
    முகேஷ் அம்பானி

    இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி - போர்ப்ஸ் பட்டியல் வெளியீடு

    போர்ப்ஸ் பட்டியலில் தொடர்ந்து 13-வது முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரராக இடம் பிடித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க வர்த்தக பத்திரிகை ‘போர்ப்ஸ்’, இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் தொடர்ந்து 13-வது முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரராக இடம் பிடித்துள்ளார்.

    முதல் இடம் வகிக்கிற அவருக்கு 88.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 250 கோடி) சொத்துகள் உள்ளன.

    இரண்டாவது இடத்தில் கவுதம் அதானி (சுமார் ரூ.1.89 லட்சம் கோடி) உள்ளார்.

    3-வது இடத்தில் தமிழகத்தின் சிவநாடார் (1.53 லட்சம் கோடி) இருக்கிறார்.

    4-வது இடத்தை ராதாகிருஷ்ணன் தமானி, 5-வது இடத்தை இந்துஜா சகோதரர்கள், 6-வது இடத்தை சைரஸ் பூனவாலா, 7-வது இடத்தை பல்லோஞ்சி மிஸ்த்ரி, 8-வது இடத்தை உதய் கோடக், 9-வது இடத்தை கோத்ரேஜ் குடும்பத்தினர், 10-வது இடத்தை லட்சுமிமிட்டல் ஆகியோரும் பிடித்துள்ளனர்.
    Next Story
    ×