search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தால் இடிந்த வீடு
    X
    வெள்ளத்தால் இடிந்த வீடு

    ஆப்கானிஸ்தான் வெள்ளம் - பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் பர்வான், வார்டக் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

    இரவு என்பதால் மக்கள் தங்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தனர். வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    வெள்ளம் சேறும் சகதியுமான நீரை கொண்டுவந்ததால் பலர் மண்ணுக்குள் புதைந்தனர்.  1,500-க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    தொடக்கத்தில் வெள்ளத்தில் சிக்கி 70 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வெள்ளம் காரணமாக மண்ணுக்குள் புதைந்தவர்களில் பலரின் உடல்கள் மீட்கப்பட்டு 
    வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்த வெள்ளம் காரணமாக பலர் மண்ணுக்குள் புதைந்து இருப்பதால் அவர்களை மீட்கும் பணிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 
    பலர் மண்ணுக்குள் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×