search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழையால் சாலையில் வெள்ளம்
    X
    கனமழையால் சாலையில் வெள்ளம்

    பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழை - 90 பேர் பலி

    பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் போன்ற பல்வேறு சம்பவங்களால் 90 பேர் உயிரிழந்துள்ளன.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டின் சிந்து, கைபர் பக்துவா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களிலும் கராச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் கனமழையால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. 

    கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் கனமழை, வெள்ளம் காரணமாக  இடிந்து விழுந்துள்ளன. பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், கட்டிட இடிந்து விபத்து போன்ற விபத்துக்களால் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளன. பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








    Next Story
    ×