என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பேன் - ஜோ பிடன் சொல்கிறார்
Byமாலை மலர்16 Aug 2020 10:34 PM GMT (Updated: 16 Aug 2020 10:34 PM GMT)
ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு எல்லைப் பிரச்சினைகளில் ஆதரவாக இருப்பேன் என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்தியாவின் 74-வது சுதந்திரதினவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு முன்னணியில் இருந்த நான்தான் பணியாற்றினேன். அப்போது நான் கூறியது, இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்புநாடுகளாக மாறினால், கூட்டாளிகளாக இருந்தால், இந்த உலகம் பாதுகாப்பானதாக மாறும் என்றேன்.
நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், இந்த வார்த்தையை நான் தொடர்ந்து நம்புவேன். இந்தியா தற்போது சந்தித்துவரும் உள்நாட்டு பிரச்சினைகளிலும், எல்லைப் பிரச்சினைகளிலும், அச்சுறுத்தல்களிலும் அந்நாட்டுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும், பெரிய சவாலாக இருக்கும் பருவநிலை மாற்றம், உலக சுகாதார பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்போம்.
அதுமட்டுமல்லாமல் இரு நாடுகளிலும் ஜனநாயகத்தை வலுப்பெறுவதற்கு உழைப்போம். ஏனென்றால் இரு நாடுகளிலும் பன்முகத்தன்மைதான் பரஸ்பர வலிமை. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஆழம் அதிகரிக்கும், இரு நாடு மக்களுக்கு இடையிலான நட்புறவும் வளரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
×