search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரசுத்துறைகளுக்கு 23-ந் தேதி விடுமுறை: மனிதவளத்துறை பொது ஆணையம் அறிவிப்பு

    அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறை விடப்படுகிறது.
    அபுதாபி:

    அரசின் மனிதவளத்துறை பொது ஆணையம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரகத்தில் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி அரசுத்துறைகளுக்கு வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறை விடப்படுகிறது. அன்றைய தினம் இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசுத்துறைகளுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் வாராந்திர பொது விடுமுறையாகும். ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி வருகிற 23-ந்தேதி பொது விடுமுறை விடப்படுவதால் இந்த வார விடுமுறை வருகிற வாரத்தில் 3 நாட்களாக இருக்கும். மேலும் ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பபு என்பது பிறை பார்க்கப்படுவதை பொறுத்து இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமீரக மனிதவளம் மற்றும் அமீரகத்தைச் சேர்ந்தவர்களை பணியமர்த்தும் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’தனியார் துறை நிறுவனங்களுக்கு ஹிஜ்ரி இஸ்லாமிய வருடப் பிறப்பையொட்டி வருகிற 23-ந் தேதி பொது விடுமுறை விடப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×