search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்
    X
    மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்

    10 லட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம்- அமீரக துணை அதிபர் அறிவிப்பு

    உலக அளவில் 10 லட்சம் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை அமீரக துணை அதிபர் அறிவித்துள்ளார்.
    துபாய்:

    அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உலக அளவில் மருத்துவ துறையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி அளிக்க உதவும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக உலக அளவில் பணியாற்றும் 10 லட்சம் மருத்துவ ஊழியர்கள் பயனடைவார்கள்.

    இதற்காக அமீரக அரசு சார்பில் உலக அளவில் தனித்துவம் வாய்ந்த 67 மருத்துவ பயிற்சி மையங்களில் இருந்து 140 சிறப்பு நிபுணர்கள் மூலமாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரக உள்துறை மந்திரியும், துணை பிரதமருமான ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் ஒத்துழைப்பில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்த பயிற்சியின் மூலம் உலக அளவில் மருத்துவ துறைக்கு அமீரகம் சார்பில் ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சிறப்பு மருத்துவ பயிற்சி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை குறித்த மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை தொலைதூரத்தில் இருந்து அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×