search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை
    X
    சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை

    டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹன்னா புயல்- சூறாவளி காற்றுடன் கனமழை

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஹன்னா புயல் தாக்கியதைத் தொடர்ந்து, கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்கிறது.
    டெக்சாஸ்:

    அமெரிக்காவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாநிலத்தில் ஹன்னா புயல் தாக்கியது. அட்லாண்டிக் கடலில் உருவான இந்த புயல், தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று மாலை தாக்கியது. அதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளில் கடும் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

    இந்த புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹட்சன் பகுதியையும் இது தாக்கும் என கருதப்படுகிறது.

    அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், ஹன்னா புயல் கரையை கடக்கும் சமயத்தில் மணிக்கு 120 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசும் என்றும், கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×