search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹபீஸ் சயீது
    X
    ஹபீஸ் சயீது

    முடக்கப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதுவின் வங்கி கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வருகை

    பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதற்காக தடை விதிக்கப்பட்ட ஹபீஸ் சயீதுவின் வங்கி கணக்கு தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
    இஸ்லாமாபாத்:

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. 

    இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்  பயங்கரவாதி ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.  

    இவர் தனது அமைப்பு மூலம் மற்றும் தனிப்பட்ட வங்கி கணக்கு மூலமாகவும் பயங்கரவாதி செயல்களுக்கு நிதி திரட்டுவதாகவும், அதை தடுக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.
     
    இதையடுத்து ஹபீஸ் சயீது மற்றும் அவனது கூட்டாளிகளை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்ட பயன்படுத்தப்பட்ட ஹபீஸ் சயீது மற்றும் அவனது கூட்டாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

    இந்நிலையில், முடக்கப்பட்டிருந்த ஹபீஸ் சயீது மற்றும் அவனது கூட்டாளிகளின் வங்கி கணக்குகள் இன்று முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபையின் நிதி தடைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிதி தடைக்குழு ஹபீஸ் சயீது மற்றும் அவனது கூட்டாளிகளின் வங்கி கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி அளித்ததாகவும், சர்வதேச நிதி தடைக்குழுவின் ஒப்புதலையடுத்து முடக்கப்பட்டிருந்த ஜமாத் உத் தவா அமைப்பினரின் வங்கி கணக்குகளை பாகிஸ்தான் அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள்
    தகவல் வெளியிட்டுள்ளன.




    Next Story
    ×