search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட உள்ள ஹோப் விண்கலம்.
    X
    செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்பட உள்ள ஹோப் விண்கலம்.

    ஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏவப்படுமா?

    ஜப்பானில் கனமழை பெய்து வருவதால் அமீரகத்தில் உருவாக்கப்பட்ட ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏவப்படுமா? என்பதற்கு அதிகாரி பதில் அளித்துள்ளார்.
    துபாய்:

    அமீரகத்தில் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் உள்ளது. இந்த மையத்தில் செவ்வாய்கிரகத்திற்கு ஏவுவதற்காக ஹோப் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த விண்கலம் தயார் நிலையில் இருப்பதால் வருகிற 15-ந் தேதி நள்ளிரவு 12.51 மணிக்கு ஜப்பான் நாட்டின் டனகஷிமா விண்வெளி மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எச் 2 ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில் ஹோப் விண்கலத்தின் உள்ளே 800 கிலோ ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலம் மிட்ஷுபிஸ்சி கனரக தொழிற்்சாலையில் தயாரிக்கப்பட்ட எச் 2 ஏ என்ற ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த வகை ராக்கெட் விண்ணில் 97.6 சதவீதம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. வருகிற 15-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பயணப்பாதை சரியான கோணத்தில் இருக்கும். அதாவது பூமியை செவ்வாய் கிரகம் ராக்கெட் ஏவுதளம் உள்ளது.

    இங்கு ஏற்கனவே பல்வேறு ராக்கெட்டுகள் மோசமான வானிலை காரணமாக விண்ணில் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்களை அனுப்பும் கார்கோ ராக்கெட் வானிலை மோசமடைந்ததை தொடர்ந்து விண்ணில் ஏவுவது தள்ளி வைக்கப்பட்டது.

    ஹோப் விண்கலம் கொரோனா பாதிப்பு சவாலை கடந்து, தற்போது மோசமான வானிலை என்னும் சவாலையும் சந்தித்து வருகிறது. ஜப்பானில் தற்போது மழைக்காலம் நிறைவடையும் தருணமாகும். அதன் காரணமாக பலத்த காற்றுடன் கனமழையும் அவ்வப்போது, பெய்து வருகிறது. வானம் தொடர்ந்து மேகமூட்டமாகவும் காட்சியளிக்கிறது.

    இது குறித்து அமீரக செவ்வாய் கிரக பயணத்திட்ட துணை மேலாளர் சுஹைல் அல் தப்ரி கூறியதாவது:-

    ஹோப் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு இன்னும் 8 நாட்கள் உள்ளது. அதற்குள் மழைக்காலம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து வானிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மழைக்காலமாகும். எனவே விரைவில் காலநிலை சீரடையும் என்ற நம்பிக்கை உள்ளது. டனகஷிமா விண்வெளி மையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு் அமீரகத்தின் கலீபா சாட் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×