search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப்
    X
    பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப்

    பிரான்சில் திங்கட்கிழமை ஊரடங்கை விலக்க முடிவு - பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவிப்பு

    பிரான்ஸ் நாட்டில் வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கி கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர். வைரசை கட்டுப்படுத்த மார்ச் 17-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

    தற்போது வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று 178 பேர் மரணம் அடைந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் 3000-க்கும் குறைவான நோயாளிகளே உள்ளனர். 

    கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில், வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கிக் கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என பிரதமர் எட்வர்ட் பிலிப் கூறியுள்ளார். 

    கொரோனா பாதிப்பின் அடிப்படையில் பிரான்ஸ் நாடு சிவப்பு மற்றும் பச்சை ஆகிய இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
    Next Story
    ×