search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நைஜீரிய ராணுவ வீரர்கள்
    X
    நைஜீரிய ராணுவ வீரர்கள்

    நைஜீரியா: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 21 கொள்ளையர்கள் பலி

    நைஜீரியா நாட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர்.
    அபுஜா:

    போகோஹரம், ஐ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நைஜீரியாவில் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. 

    இதனால் அங்கு வாழும் மக்களில் சிலர் குழுக்களாக இணைந்து பொருளாதார தேவைகளுக்காக உணவு பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். 

    ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டும் இத்தகைய குழுவினர் கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு வாழும் மக்களை கொன்றும் வீடுகளை எரித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இவ்வாறு செயல்படும் குழுக்களில் பன்டிட்ஸ் என்ற கொள்ளை கும்பல் முக்கியமான ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த கொள்ளை கும்பலை ஒடுக்க நைஜீரியா நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அந்நாட்டின் சம்ஃபரா மாகாணம் சுர்மி நகரின் ஹடரின் டஜி பகுதியில் பதுங்கி இருந்த பன்டிட்ஸ் கொள்ளை கும்பலை குறிவைத்து நைஜீரியா பாதுகாப்பு படையினர் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பன்டிட்ஸ் கொள்ளையர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தேடுதல் வேட்டையின் போது நைஜீரிய பாதுகப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×