search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்சிகோ கடற்கரையில் ஒதுங்கிய கண்கள் இல்லாத வினோத உயிரினம்
    X
    மெக்சிகோ கடற்கரையில் ஒதுங்கிய கண்கள் இல்லாத வினோத உயிரினம்

    மெக்சிகோ கடற்கரையில் ஒதுங்கிய கண்கள் இல்லாத வினோத உயிரினம்

    மெக்சிகோ கடற்கரை பகுதியில் டால்பின் தலை போன்ற அமைப்புடைய கண்கள் அற்ற வினோத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ள அழகிய கடற்கரை நகரம் புவேர்ட்டோ வல்லார்டா. கடற்கரை நகரமான இங்கு அதன் எழில் மற்றும் இயற்கையை ரசிக்கவும், கடலில் அலைச்சறுக்கு சாகசங்கள் செய்யவும் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை தருவது உண்டு.

    இந்நிலையில், இப்பகுதியில் உள்ள டெஸ்டிலாடெரஸ் கடற்கரையில் கண்கள் இல்லாத வினோத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று கடற்கரையில் மக்கள் பொழுதை போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது இறந்த நிலையில் ஒரு உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியது. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு டால்பின் போன்று தோற்றமளித்ததால் மக்கள் அருகில் சென்று பார்த்தனர். ஆனால் கண்கள் இல்லாமல் கொடிய பற்களுடனும் , தலைப்பிரட்டை போன்ற வாலுடனும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பசிபிக் கடலின் மிக ஆழமான கடல்பகுதியில் (சூரிய ஒளி புகமுடியாத ஆழம்) இருந்து அந்த உயிரினம் வந்திருக்கலாம். அத்தையக ஆழத்தில், முழுவதும் இருளாக இருக்கும் பட்சத்தில் கண்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என உள்ளூர் வாசிகள் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. 

    Next Story
    ×