search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு பகுதி
    X
    நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு பகுதி

    பிரேசிலில் கனமழை - வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

    பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
    ரியோ டி ஜெனிரோ:

    பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக ஸ்டேட் ஆப் மினஸ் ஹிராய் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. 

    இதன் காரணமாக மின்சாரம், சாலை போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

    இதற்கிடையில், பிரேசிலில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 35 ஆக இருந்தது.

    இந்நிலையில், கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்த கனமழையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 19 பேரை காணவில்லை எனவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    காணமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×