search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்சா வகை மீன்
    X
    வார்சா வகை மீன்

    350 பவுண்டு எடை... அமெரிக்காவில் சிக்கிய அரிய வகை வார்சா மீன்

    அமெரிக்காவின் புளோரிடா மாநில கடல் பகுதியில் சுமார் 158 கிலோ எடையுள்ள அரிய வகை வார்சா மீன் சிக்கியது. இதன் முக்கிய உறுப்பான ‘ஓட்டோலித்’ மிகவும் மதிப்புமிக்கது.
    புளோரிடா:

    அமெரிக்காவின் கடலோர பகுதியில் உள்ளது புளோரிடா மாநிலம். இம்மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடல்பகுதியில் 350 பவுண்டுகள் (158 கிலோ) எடை உடைய வார்சா வகை மீன் சிக்கியது. 

    இது குறித்து மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் கூறுகையில், ‘இந்த மீன் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி சுமார் 600 அடி ஆழத்தில் சிக்கியது. பொதுவாக இவை 180 முதல் 1700 அடி ஆழத்தில் காணப்படும். வார்சா வகை மீன்களில், இந்த மீன்களுக்கு 10 முதுகெலும்புகள் இருக்கும். மற்றவைகளில் 11 முதுகெலும்புகள் காணப்படும். 

    436 பவுண்டுகள் எடைகொண்ட வார்சா வகை மீன் இதற்கு முன்னதாக டெஸ்டின் நகர் அருகே பிடிபட்டுள்ளது. பெரிய மற்றும் பழைய மீன்களின் மாதிரிகள் அரிதானவை. வார்சா வகை மீன்களின் ‘ஓட்டோலித்’ என்ற உறுப்பு மதிப்புமிக்கது’, என கூறினர். 

    அமெரிக்காவின் மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த உயிரியலாளர்கள் இந்த மீனின் வயது 50 ஆண்டுகள் என கணித்துள்ளனர். மேலும் தங்களின் வயதை கணக்கிடும் திட்டத்தின் அடிப்படையில், சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இதுவே பழமையானது எனவும் குறிப்பிட்டனர்.
    Next Story
    ×