search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. பருவநிலை மாநாடு
    X
    ஐ.நா. பருவநிலை மாநாடு

    2 வாரங்களாக நடந்த ஐ.நா. பருவநிலை மாநாடு முடிவடைந்தது

    பருவநிலை மாற்றத்தால் பூமி வெப்பமயமாகும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக 2 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரில், ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் சுமார் 200 நாடுகள் பங்கேற்றன. பருவநிலை மாற்றத்தால் பூமி வெப்பமயமாகும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக 2 வாரங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த 25 ஆண்டுகளில் நீண்ட நாட்களாக நடந்த பருவநிலை பேச்சுவார்த்தை இதுவே ஆகும்.

    ஆயினும், எந்த முடிவும் எடுக்கப்படாமல் நேற்று இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்தது. பூமி வெப்பமயமாதலுக்கு காரணமான பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதிலும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு உதவுவதிலும் பெரிய நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் இறுதியில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து அடுத்த ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
    Next Story
    ×