என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூடானில் சோகம் - செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் பலி
Byமாலை மலர்3 Dec 2019 5:35 PM GMT (Updated: 3 Dec 2019 5:35 PM GMT)
சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார்டோம்:
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தொழிற்சாலைக்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×