search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங் முகமூடி போராட்டக்காரர்கள்
    X
    ஹாங்காங் முகமூடி போராட்டக்காரர்கள்

    முகமூடி அணிய விதிக்கப்பட்ட தடை அடிப்படை உரிமைக்கு எதிரானது: ஹாங்காங் உயர் நீதிமன்றம்

    ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் முகமூடி அணிய விதிக்கப்பட்டுள்ள தடை அடிப்படை உரிமைக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. 

    இதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    கைதி பரிமாற்ற சட்ட மசோதாவை ரத்து செய்தல், ஹாங்காங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் குறித்து விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. 

    புதிய சட்ட மசோதாவை கைவிடுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்த போது, சீனாவிடம் இருந்த சுதந்திரம்  வேண்டும் போன்ற கோரிக்கையுடன் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஹாங்காங் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். சீனா தற்போதுவரை தனது ராணுவத்தை போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவில்லை.  

    ஹாங்காங் போராட்டக்காரர்கள்
      
    போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் போலீசார் தங்கள் அடையாளங்களை கண்டுபிடித்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் முகமூடி அணிந்து போராடி வருகின்றனர். ஆனால், ஹாங்காங்கில் முகமூடி அணிவதை தடை செய்யும் விதமாக அதன் நிர்வாகம் கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டத்தை கொண்டுவந்தது. 

    இந்த சட்டத்திற்கு போராட்டக்காரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த தடை தொடர்பாக ஹாங்காங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ’ஹாங்காங்கில் மக்கள் முகமூடி அணிய தடை விதிக்கும் விதமாக நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டம் அரசியலமைப்பிற்கு புறம்பானது மற்றுமல்லாமல் அடிப்படை உரிமைக்கு எதிரானது’ என கருத்து தெரிவித்துள்ளனர்.    
    Next Story
    ×