search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் பாராளுமன்றம்
    X
    பிரிட்டன் பாராளுமன்றம்

    பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்க்கட்சி ஒப்புதல்

    பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவுக்கு தொழிலாளர் கட்சி இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    லண்டன்:

    பிரிட்டன் நாட்டு பாராளுமன்றத்தில் பொதுச்சபை, பிரபுக்கள் சபை என இரு சபைகள் உள்ளன. பொதுச்சபையில் 650 எம்.பி.க்கள் பிரபுக்கள் சபையில் 788 எம்.பி.க்கள் என மொத்தம்  1,438 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    பிரிட்டன் ராணியின் ஒப்புதலுடன் கடந்த 2011-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி பாராளுமன்றத்துக்கு முந்தையை தேர்தல் நடத்தப்பட்ட நாளில் இருந்து ஐந்தாவது ஆண்டில் வரும் கடைசி மே மாதத்தின் முதல் வியாழக்கிழமையில் மறுமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    எனினும், பிரதமர் விரும்பினால் அதற்கு எதிர்க்கட்சியினரில் ஒரு பகுதியினர் ஆதரவு அளித்தால் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த இந்த சட்டத்தில் அனுமதி உண்டு.

    அவ்வகையில், முன்கூட்டியே பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த முன்னாள் பிரதமர் தெரசா மே எடுத்த முடிவு தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது
    ஆதரவாக 522 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.

    இதை தொடர்ந்து 8-6-2017 அன்று நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. தெரசா மே மீண்டும் பிரதமரானார்.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக தெரசா மே செய்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மந்திரிகள் ராஜினாமா செய்ததால் விரக்தியடைந்த தெரசா மே தனது பிரதமர் பதவியை 24-7-2019 அன்று ராஜினாமா செய்தார்.

    போரிஸ் ஜான்சன்

    இந்நிலையில், தற்போதைய பிரதமர் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்து விட்டதால் எரிச்சலடைந்த போரிஸ் ஜான்சன் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டுக்குள் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியும் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும் என்பதால் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவுக்கு பாராளுமன்றத்துக்கு தொழிலாளர் கட்சி இன்று  ஒப்புதல் அளித்துள்ளது.

    ஜெரேமி கார்பின்

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரேமி கார்பின், ‘நமதுநாடு இதுவரை காணாத வகையில் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் வகையில் வரும் தேர்தலில் எங்களது பிரசாரம் மிக தீவிரமாக அமையும்’ என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×