search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் காவல்துறையின் ரோந்து வாகனம்
    X
    ஜப்பான் காவல்துறையின் ரோந்து வாகனம்

    ஜப்பான்: குடிபோதையில் போலீஸ் கார்கள் மீது தாக்குதல் - அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

    ஜப்பான் நாட்டின் ஓகினாவோ மாகாணத்தில் குடிபோதையில் போலீஸ் ரோந்து வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் உள்ள ஓகினாவா தீவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கடேனா என்ற கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 அமெரிக்க ராணுவ தளங்களும் இங்கு அமைந்துள்ளது.

    அமெரிக்க கடற்படை வீரர்கள் உள்பட அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் என சுமார் 35 ஆயிரம் அமெரிக்கர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இதுதவிர மேலும் 15 ஆயிரம் அமெரிக்கர்கள் இங்குள்ளனர்.

    இந்த தளத்தில் பணியாற்றும் அமெரிக்க படையினரில் சிலரால் கடந்த 2016-ம் ஆண்டில் ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த கடற்படை தளத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ஓகினாவா கவர்னர் மற்றும் அங்கு வசித்துவரும் பெரும்பாலான மக்கள் முன்னர் வலியுறுத்தினர்.

    அமெரிக்க கடற்படை வீரர்களில் ஒருவரான ஐமி மேஜியா(21) என்பவர் அதே ஆண்டில் சாலை விதிகளை மீறியவகையில் எதிர்திசையில் தனது காரை வேகமாக ஓட்டிச்சென்று அவ்வழியாக வந்த இன்னொரு காரின்மீது நேருக்குநேராக மோதினார். இதில் எதிரேவந்த காரில் இருந்த இருவர் காயமடைந்தனர்.

    இந்த விபத்தின்போது ஐமி மேஜியா குடிபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டிய ஓகினாவா போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையடுத்து, ஓகினாவா தீவில் உள்ள கடேனா கடற்படை தளத்தில் முகாமிட்டுள்ள 18,600 கடற்படை வீரர்கள் இனி மது அருந்த கூடாது என வாஷிங்டன் நகரில் உள்ள  அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகான் தடை விதித்துள்ளது.

    ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படை தலைமையகம்

    இந்நிலையில், ஓகினாவா மாகாணத்தில் உள்ள ஓன்னாவ் என்ற நகரில் நேற்றிரவு குடிபோதையில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் போலீஸ் கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் ஒரு காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. போதையில் தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து காவலில் அடைத்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
    Next Story
    ×