என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
உக்ரைனில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
Byமாலை மலர்23 Oct 2019 11:58 AM GMT (Updated: 23 Oct 2019 11:58 AM GMT)
உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.
கீவ்:
கிழக்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். அந்நாட்டின் தலைநகர் கீவ்வில் உள்ள புஷ்கின்ஸ்கா பகுதியில் நேற்று நள்ளிரவு சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் திடீரென பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், ஒரு பெண் படுகாயமடைந்தார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் போலீசார் உயிரிழந்த 2 நபர்கள் தான் தாங்கள் மறைத்து வைத்திருந்த கையெறி குண்டை தவறுதலாக வெடிக்கச்செய்திருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.
Next Story
×