search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சியானி பென்னி
    X
    சியானி பென்னி

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனரா? - கேரள இளம் பெண் அபுதாபியில் பேட்டி

    கேரளாவில் மாயமான இளம்பெண் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டதாக எழுந்த புகாருக்கு அபுதாபியில் விளக்கமளித்துள்ளார்.
    துபாய்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் சியானி பென்னி(19). இவர் கடந்த 18-ம் தேதி கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பென்னியின் பெற்றோர் தனது மகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக டெல்லி போலீசில் புகார் அளித்தனர். 

    மேலும், பென்னியின் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளித்தனர்.

    போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, பென்னி காணாமால் போனதாக கருதப்பட்ட நாளன்று பிற்பகல் விமானம் மூலம் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. 

    இந்நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனரா? என்ற புகாருக்கு சியானி பென்னி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அபுதாபியில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    என்னை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்தி வந்துள்ளனர் என்பது முற்றிலும் தவறான செய்தி. அபுதாபியில் வசிக்கும் இந்தியர் ஒருவருடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் எனக்கு சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நான் அவரை திருமணம் செய்து கொண்டு அபுதாபியிலேயே வாழ விரும்பினேன். அதனால் கேரளாவில் இருந்து விமானம் மூலம் அபுதாபிக்கு வந்துள்ளேன். 

    சியானி பென்னி

    மேலும், எனது விருப்பத்தின்படி கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மதம் மாறி விட்டேன். சியானி பென்னி என்ற எனது பெயரை ஆயிஷா என பெயர் மாற்றம் செய்து விட்டேன்.  இதை கடந்த 24-ம் தேதி அபுதாபி நீதிமன்றத்தில் வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறேன்.

    என்னை மதம்மாற யாரும் வற்புறுத்தவில்லை, எனது சொந்த விருப்பத்தினாலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளேன். மேலும், எனது பெற்றோர் என்னை அழைத்து செல்வதற்காக அபுதாபிக்கு வந்தனர். இந்தியாவிற்கு வர விருப்பமில்லை என அவர்களிடம் திட்டவட்டமாக கூறிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக, சியானி பென்னி  இந்திய அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், தேசிய சிறுபான்மையினத்தவர்கள் ஆணையம், கேரளா மற்றும் டெல்லி முதல் மந்திரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    ஒவ்வொரு இந்திய குடிமக்களும் தாம் விரும்பும் மதத்தை தேர்ந்தெடுக்க நமது அரசியலமைப்பு சுதந்திரம் வழங்கியுள்ளது. 

    அந்த சுதந்திரத்தின்படியே நான் இஸ்லாம் மதத்தை ஏற்று பின்பற்ற தொடங்கியுள்ளேன். நான் யாருடைய தூண்டுதலின் பெயரிலேயோ அல்லது அழுத்தம் கொடுத்தோ மதம் மாறவில்லை. மேலும், ஐ.எஸ் பயங்கரவாதிகள் யாரும் என்னை கடத்தவில்லை. ஆகவே என்னைப்பற்றி இந்தியாவில் பரப்பப்படும் போலி செய்திகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×