search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷேக் ஹசினாவுக்கு தடுப்பூசி ஹீரோ விருது
    X
    ஷேக் ஹசினாவுக்கு தடுப்பூசி ஹீரோ விருது

    தடுப்பூசி ஹீரோ விருது - ஷேக் ஹசினாவுக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்டது

    வங்காளதேசத்தில் போலியோ, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 'தடுப்பூசி ஹீரோ’ விருது அளிக்கப்பட்டது.
    நியூயார்க்:

    உலகளாவிய அளவில் பல்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி முகாம்கள் மற்றும் நோய் எதிர்ப்பு இயக்கத்தை ’காவி’ (Global Alliance for Vaccination and Immunisations (GAVI)) என்னும் அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது.

    இந்த இயக்கத்தின் உதவியுடன் வங்காளதேசம் நாட்டில் போலியோ, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்களை கட்டாய தடுப்பூசி திட்டம் மூலம் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு 'தடுப்பூசி ஹீரோ’ விருது நேற்று வழங்கப்பட்டது.

    ஷேக் ஹசினா விருதை பெற்ற காட்சி

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருதை 'காவி’ அமைப்பின் தலைவரான டாக்டர் ந்கோஸி ஒக்கோன்ஜோ-இவியா,
    ஷேக் ஹசினாவுக்கு வழங்கி வாழ்த்து மடலை வாசித்தார்.

    இந்த விருதுக்காக தன்னை தேர்வு செய்தமைக்காக நன்றி தெரிவித்த ஷேக் ஹசினா, மிகவும் சிறப்புக்குரிய இவ்விருதினை வங்காளதேசம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

    ஆரோக்கியமான மக்களால்தான் ஒரு நாட்டை வழிநடத்த முடியும் என்பதால் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நோயற்ற சமுதாயம் அமைந்தாக வேண்டும்.

    எனவே, சர்வதேச சுகாதார திட்டத்தின்கீழ் வரும் 2030-ம் ஆண்டுக்குள்நாட்டு மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு திறனுக்கான தடுப்பு முறைகளை பெற்றாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
    Next Story
    ×