search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராபர்ட் முகாபே
    X
    ராபர்ட் முகாபே

    ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே காலமானார்

    ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உடல் நல குறைவால் இன்று காலமானார்.
    ஹராரே:

    ராபர்ட் கேப்ரியல் முகாபே கடந்த 1924ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி பிறந்தார். இவர் ஜிம்பாப்வே நாட்டின் பிரதமராக 1980 முதல் 1987 வரை பதவி வகித்தார்.

    அதன்பின்னர் 1987ம் ஆண்டு முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை ஜிம்பாப்வே நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தார். 1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த ராபர்ட்டை, ஆப்பிரிக்க மக்கள் தங்கள் நாயகராகப் போற்றினர்.



    இவரின் பொருளாதார கொள்கைகளும், இரண்டாம் கொங்கோ போரில் இருந்த குறுக்கிடலும் ஜிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயின. இதனால் பல நாடுகள் இவரை குற்றம் சாட்டினர். ராபர்ட், கடந்த 2015ம் ஆண்டு எத்தியோப்பியா தலைநகர் ஆடிஸ் ஆபபாவில் நடைபெற்ற ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில், ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக  பொறுப்பேற்றார்.

    இந்நிலையில் 95 வயதான இவர், உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவையடுத்து, ஜிம்பாப்வேயின் தற்போதைய ஜனாதிபதி எம்மர்சன் தம்புட்ஸோ மனாக்வா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜிம்பாப்வேயின் ஸ்தாபக தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான  ராபர்ட் முகாபே காலமானதை நான் மிகவும் வருத்தத்துடன் அறிவிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.







    Next Story
    ×